twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோதிகாவைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.. பிரபல இயக்குநர் நறுக்!

    |

    சென்னை: நடிகை ஜோதிகாவுக்கு எதிராக பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டடார்கள் என இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    ஜோதிகாவைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.. பிரபல இயக்குநர் நறுக்! - வீடியோ

    அரசு இராச மிராசுதார் மருத்துவமனை தஞ்சை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது.

    தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வரப்பிரசாதமாக அமைந்துள்ள தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

    தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி.. ஜோதிகாவுக்கு குவியும் பாராட்டு !தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி.. ஜோதிகாவுக்கு குவியும் பாராட்டு !

    ஜோதிகா பேச்சு

    ஜோதிகா பேச்சு

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் அரசு மருத்துவமனையில் படமாக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கோயிலுக்கு செலவு செய்வதைவிட மருத்துவமனைகளுக்கு செலவு செய்யுங்கள் எனவும், மருத்துவமனையின் அவல நிலையை கண்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கும் செல்லாமல் திரும்பி வந்து விட்டதாகவும் தனது மனக்குமுறலை விருது விழாவில் கொட்டித் தீர்த்தார்.

    அமைச்சரிடம் வழங்கினார்

    அமைச்சரிடம் வழங்கினார்

    இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகரம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான நிதியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் திரைபட இயக்குநர் சரவணன் வழங்கினார்.

    இயக்குநர் பேச்சு

    இயக்குநர் பேச்சு

    மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு திடல், குழந்தைகள் பிரிவில் வண்ண வண்ண ஓவியங்கள் வரைய அதற்கான செலவுகள் அனைத்தையும் ஜோதிகா ஏற்று அதை செய்துள்ளார். இதுகுறித்து பேசிய திரைப்பட இயக்குனர் சரவணன், மருத்துவமனை அவலம் குறித்து நடிகை ஜோதிகா தெரிவித்திருந்தார்.

    காணாமல் போய்விட்டார்கள்

    காணாமல் போய்விட்டார்கள்

    அதன் தொடர்ச்சியாகவே அவர் முதல் கட்டமாக ரூபாய் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செய்து உள்ளார். ஜோதிகாவின் கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பேசியவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டார்கள். ஆனால் உண்மையாக பேசிய ஜோதிகா இன்று மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார் இது முதல் கட்டம் தான் தொடர்ந்து அவர் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.

    English summary
    Director Saravanan says who spoke about Jyothika, they missing now. But Jyothika only dos the need. Director Saravanan handed over the Cheque to Minister Vijaya baskar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X