Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்கள் கூட்டணிக்கு எப்பவுமே வெற்றிதான்.. ஹீரோவை புகழ்ந்து தள்ளிய இயக்குநர்!
சென்னை: எங்கள் கூட்டணிக்கு எப்போதும் வெற்றிதான் என இயக்குநர் சற்குணம் நடிகர் விமலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நடிகர் விமல் நடிகை ஓவியாவை வைத்து இயக்குநர் சற்குணம் இயக்கிய படம் களவாணி. இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் சற்குணம் களவாணி பார்ட் 2 இயக்கினார். இந்தப் படத்திலும் களவாணி படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே நடித்துள்ளனர்.
இந்த படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் சற்குணம் களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது சவாலான விஷயம்.
ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர். எனக்கும் விமலுக்கும் நல்ல ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
இதேபோல் விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்று கூறினார் சற்குணம்.