Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொல்லிமலை பின்னணியில் உருவான காமெடி படம் ... ‘ சூ மந்திரகாளி" இயக்குனர் சற்குணம் மேற்பார்வையில்
சென்னை : பிரபல இயக்குனர் சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ' சூ மந்திரகாளி'
செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பது தான் இவர்களது வேலை.
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தெறிக்கவிடும் கமல்!
படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து வர பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.
திருமணம் நடந்ததா?
அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ' சூ மந்திரகாளி'
அன்னக்கிளி வேலு
புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம் வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார்.
செப்டம்பர் 24
ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள ' சூ மந்திரகாளி' படத்திற்கு முகமது பர்ஹாண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன் இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது 'சூ மந்திரகாளி'
நிறைய திட்டங்கள்
இந்த படத்தின் குழு ஒட்டு மொத்தமாக ப்ரமோஷன் வேலைகளில் இறங்கி படத்தின் சுவாரஸ்யங்களை மேலும் ரசிகர்கள் ஈர்க்கும் வண்ணம் நிறைய திட்டங்கள் தீட்டி வருகின்றனர் . படத்தின் கலை - J.K.ஆண்டனி படத்தொகுப்பு - கோகுல், நடனம் - தீனா, சண்டை பயிற்சி - டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு - சதிஷ் என பலம் கொண்ட ஒரு கூட்டணியாக செயல் பட்டு வருகிறது. விரைவில் வெள்ளி திரையில் காணலாம்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?