Sasi: அப்பவே அதுக்கு அவங்க தயாரா இல்லை.. பூ பட நாயகி குறித்து பேசிய இயக்குநர் சசி!

நடிகை பார்வதி தமிழில் பூ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 19 வயது தான் இருக்கும். தொடர்ந்து மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்த பார்வதி தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் அவர் விக்ரமின் ஜோடியாக நடித்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தை இயக்குநர் பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை இந்தப் படம் வெளிப்படுத்தியது. இந்நிலையில் பூ படத்தில் பார்வதியுடன் இணைந்து செயலாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் சசி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

parvati poo movie sasi

நடிகை பார்வதி: நடிகை பார்வதி தமிழ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். தொடர்ந்து நடித்து வருபவர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக பார்வதி தன்னுடைய நடிப்பில் மாஸ் காட்டியிருந்தார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருநதது. படத்தில் விக்ரமுடன் போட்டி போட்டு நடித்திருந்தார் பார்வதி. அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

parvati poo movie sasi

பார்வதி ரீ-என்ட்ரி: இந்த படத்தின் மூலம் நீண்ட காலங்களுக்கு பிறகு தமிழில் ரீ -என்ட்ரி கொடுத்திருந்தார் பார்வதி. முன்னதாக சசி இயக்கத்தில் பூ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2008ம் ஆண்டில் வெளியாகி மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது பார்வதிக்கு 19 வயது தான் இருக்கும். நடிகர் ஸ்ரீகாந்தை காதலிப்பவராக அவர் சிறப்பான நடிப்பை அந்த வயதிலேயே வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சசி கொடுத்துள்ள பேட்டியொன்றில் நடிகை பார்வதி குறித்து மனம் திறந்துள்ளார்.

பார்வதி குறித்து சசி பாராட்டு: பூ படத்தில் நடிக்கும்போது மிகவும் சிறிய பெண்ணாக இருந்த நடிகை பார்வதியிடம் தான் விளம்பர படங்களில் நடிக்கலாமே என்று கேட்டதாகவும் ஆனால் ஒரு பொருளை உபயோகித்து பார்க்காமல் எப்படி அந்த பொருளை மற்றவர்களை வாங்க சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பிய பார்வதி, கேமராவிற்கு முன்னதாக தான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாக சசி தெரிவித்துள்ளார். தற்போது பெரிய ஆர்ட்டிஸ்ட்டாக உள்ள போதிலும் விளம்பரம் பக்கமே அவர் வரவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வயதிலேயே பார்வதிக்கு தெளிவான மனநிலை இருந்ததாகவும் அதை தற்போது வரை தொடர்வதாகவும் சசி மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

parvati poo movie sasi

நீயெல்லாம் ஒரு நடிகையா?: இதேபோல பூ படத்தில் கூடுதல் கால்ஷீட்டுக்காக பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய செக் கொடுத்ததாகவும் அதை வாங்கிக் கொண்டு சென்றவர் திரும்பி வந்து செக்கை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் சசி தெரிவித்துள்ளார். அறைக்கு போய் தன்னுடைய கண்ணாடியில் பார்த்ததாகவும் மாரியாக வாழ்வதற்காக ஒரு தொகை கேட்டாய், இப்போ மாரியாக வாழ்வதற்கு கூடுதல் தொகை கேட்கிறாயே, நீயெல்லாம் என்ன நடிகை என்று மாரி கேவலமாக கேட்கிறாங்க சார் என்று பார்வதி இதற்கு கொடுத்த விளக்கம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும் சசி குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X