சசிகுமாரின் ‘Freedom‘ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் Freedom என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கி உள்ளார். இதில், லீட்ரோலில் லிஜோமோல் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது.

சுப்புரமணிய புரம், நாடோடிகள், சுந்தரபாண்டி அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து வந்த சசிகுமாரின் படங்கள் திடீரென தோல்வியைத் தழுவியது. இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு அயோத்தி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தியேட்டரில் வெளியான போதும் படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது. ஆனால், அயோத்தி படம் ஓடிடியில் வெளியான போது, படத்தைபார்த்த பலரும் பாராட்டினார்கள்.

tourist family Freedom Sasikumar
Photo Credit:

சசிகுமார்: அந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு சசிகுமார் நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியாகி இந்த வசூலை அள்ளியது. அபிசன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், திலக், பகபதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாக, சசிக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை அடுத்து,
சசிகுமார் Freedom என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், சசிகுமாருடன் லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் என நடித்துள்ளனர். 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை: இப்படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இப்படத்தில் சசிகுமார் இலங்கை தமிழராக நடித்துள்ளார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் சந்திக்கும் வலிகளையும், வேதனையையும் அப்பட்டமாக காட்டும் படமாக இப்படம் உள்ளது. தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதைக்களமாக உள்ளது. Freedom திரைப்படம் ஜூலை 10ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

More from Filmibeat

Read more about: tourist family freedom sasikumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X