பாலா, பாரதிராஜா கைவிட்ட ப்ராஜக்ட்... என்ன இவர் எடுக்கப் போறாரா?
சென்னை : இயக்குநர்கள் பாலா மற்றும் பாரதிராஜா இருவரும் குற்றப்பரம்பரை கதையை எடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இருவருமே அந்தக் கதையை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் அந்தக் கதையை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றப்பரம்பரை கதைக்களம்
குற்றப் பரம்பரையினர் குறித்த கதையை இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா படமாக எடுக்க முயன்றனர். ஆனால் யார் இந்தப் படத்தை எடுப்பது என்பதில் ஏற்பட்ட மோதலில் இருவருமே அந்தப் படத்தை எடுக்கும் முயற்சியை கைவிட்டனர். இதனால் இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றப் பரம்பரையினர்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருட்டுத்தொழிலை அடிப்படையாக கொண்டவர்கள் என்று சில சமூகங்களை அடையாளப்படுத்தி அவர்கள் எங்கு சென்றாலும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்று கெடுபிடி காட்டப்பட்டது. இவர்கள் குற்றப்பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டனர்.

குற்றப்பரம்பரை படம்
இதையடுத்து இந்த விஷயத்தை எதிர்த்து போராட்டங்கள் மற்றும் அதையொட்டி உயிர்த்தியாகங்கள் செய்யப்பட்டது. இதையொட்டிய கதைக்களத்திலேயே குற்றப்பரம்பரை படத்தை எடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு ஆனால் கைவிடப்பட்டது. இந்தப் படம் படமாக்கப்பட்டால் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சசிக்குமார் இயக்கும் குற்றப்பரம்பரை
இந்நிலையில் இந்தக் கதைக்களத்தை கையிலெடுத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார். இவர் இதை வெப் தொடராக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த தொடரில் சத்யராஜ் ராணா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு பின் இயக்கம்
இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கிய சசிக்குமார், கடந்த 2010ல் ஈசன் என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை. நடிகராகவே தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











