Director Seeman: எல்ஐசி படத்தில் இணைந்த சீமான்.. என்ன ரோல் தெரியுமா?

சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் லீட் கேரக்டரில் நடித்துவரும் எல்ஐசி படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கிவரும் இந்தப் படத்தை அவரது ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு கிருத்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார். தவிர யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியிலேயே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது.

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தின் கதைக்களம் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். முன்னதாக லவ் டுடே என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ள பிரதீப், விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் ஈஷா மையத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் பிரபல இயக்குநர் மற்றும் அரசியல்வாதி சீமான் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்தில் நயன்தாராவும் கேமியோ கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Director Seeman joined an important role in Vignesh shivans LIC movie

எல்ஐசி படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்த பிரதீப், இந்தப் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நாயகனாக களமிறங்கியுள்ளார். எல்ஐசி அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் தொடாந்து படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது ஈஷா மையத்தில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.

பிரதீப் -கிருத்தி ஷெட்டி ஜோடி: இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியா கிருத்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார். படத்தில் பிரதீப்பின் அப்பாவாக பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் நடிக்கவுள்ளார். படத்தில் இயற்கை விவசாயத்தை விரும்பும் கேரக்டரில் இவர் நடித்துவரும் சூழலில் இவருக்கு எதிராக செயற்கை விவசாயத்தை விரும்பும் கேரக்டரில் பிரதீப் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சுவாரஸ்யமான கதைக்களத்தில் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு: இந்த முரண்பாட்டிற்கு இடையில் பிரதீப் -கிருத்திக்கிடையில் ஏற்படும் காதலும் படத்தில் முக்கியமான களமாக கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பாக இந்தப் படம் உருவாகி வருகிறது. முன்னதாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்திருந்த விக்னேஷ் சிவன் -அனிருத் மற்றும் லலித்குமார் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இதில் கூடுதலாக பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் கூடுல் அட்ராக்ஷனாக இணைந்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா பாராட்டு: முன்னதாக இந்தப் படம் குறித்து பேசிய எஸ்ஜே சூர்யா, படத்தின் தலைப்பை போலவே இந்தப் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் படம் அமையும் என்றும் கூறியிருந்தார். புதியதொரு காதல் உலகத்திற்கு இந்தப் படம் அனைவரையும் அழைத்து செல்லும் என்றும் இதை மனதில் கொண்டே இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை விக்னேஷ் சிவன் உருவாக்கியுள்ளதாகவும் எஸ்ஜே சூர்யா தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X