Seenu Ramasamy Divorce: 17 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. விவாகரத்தை அறிவித்த சீனு ராமசாமி!
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி சினிமாவை எடுத்து வருகின்றவர். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையே பெற்றது. கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மற்றும் கோழிப்பண்ணைச் செல்லத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தென்மேற்கு பருவகாற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மிகவும் பிரபலமான இயக்குநரான இவரும் அவரது மனைவியும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளதாவது, " அறிவிப்பு... அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி" என பதிவிட்டுள்ளார். அதிகாலை 4 மணி 18 நிமிடங்களுக்கு சீனு ராமசாமி தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

எழுத்தாளர்: இயக்குநர் சீனு ராமசாமி இயக்குநராக மட்டும் இல்லாமல், எழுத்தாளராக கவிஞராக இலக்கிய உலகில் அறியப்படும் முக்கியமான நபராக உள்ளார். இவரது எழுத்தில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் இவரது சினிமாவைப்போல், உலகத்தை அவரது பார்வையில் எழுதியுள்ளார். காற்றால் நடந்தேன் என்ற கவிதைத் தொகுப்பு, இவரது பால்ய காலங்களைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். இவை வாசகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற கவிதைத் தொகுப்பாக உள்ளது. அதேபோல், ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் என்ற தலைப்பிலும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
இயக்கம்: சீனு ராமசாமியைப் பொறுத்தவரையில், தமிழ் சினிமாவில் அவுட் ஆஃப் த பாக்ஸ் திங்க்கிங் கொண்ட வெகு சில இயக்குநர்களில் ஒருவர். தென் தமிழ்நாட்டினை குறிப்பாக ராமநாடு பகுதியை தனது சினிமா மூலம், அந்த மண்ணின் மக்களையும் மண்ணையும் அரங்கேற்றியவர். இவரது படங்கள் பெரும்பாலும் அந்த பகுதியைச் சுற்றியதாகத்தான் உள்ளது. இவரது இயக்கத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி இன்றைக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், இந்திய அளவிலேயே கவனம் பெற்ற நடிகராக வளர்ந்துள்ளார்.

விவாகரத்து: இவரது இயக்கத்தில்தான் முதல் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்தனர். மாமனிதன் படத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்தனர். இதில் இடம் பெற்ற பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சீனு ராமசாமி விவாகரத்தினை அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











