கல்லூரி நாட்களில் என்னை மறந்து லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள்.. கி.ரா மரணம்.. சீனுராமசாமி இரங்கல்!

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி ராவுக்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்.

1922ம் செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1958 ஆம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

பல்கலை பேராசிரியர்

பல்கலை பேராசிரியர்

7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் கி.ரா.

கிரா மறைவுக்கு இரங்கல்

கிரா மறைவுக்கு இரங்கல்

இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று இரவு எழுத்தாளர் கி.ரா காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் இரங்கல்

ஆளுநர் இரங்கல்

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீனு ராமசாமி இரங்கல்

சீனு ராமசாமி இரங்கல்

இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான கோவில் பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் எழுத்தாளர் கி ராவின் மறைவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள்

லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள்

இதுதொடர்பான தனது பதிவில், கல்லூரி நாட்களில் என்னை மறந்து லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள். வட்டார மொழியில் உலகத்தின் உன்னத உணர்வுகளை உணர்ச்சிகளை உணரச்செய்த இலக்கியக் கர்த்தா

என் இனிய கரிசல் காட்டு கடுதாசி,
செம்மண் தரை. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இதய அஞ்சலி.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X