twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க!

    |

    சென்னை: இயக்குநர் சீனுராமசாமி கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சைக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

    தென் மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது தென்மேற்கு பருவக்காற்று படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட 3 தேசிய விருதுகளை பெற்றது.

    தற்போது மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி, கூகுள் சிஇஓவான சுந்தர் பிச்சைக்கு தமிழில் டிவிட்டர் மூலஙம ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

    சீனுராமசாமி கோரிக்கை

    அதாவது, கூகுள் வழிகாட்டி (Google maps) தாய்மொழியில் திசையின் பெயர்களை சொன்னால் சுகமாய் இருக்கும்,இதை செய்ய முடிந்தால் பெருமையெல்லாம் உம்மைச்சேரும் என டிவிட்டி சுந்தர் பிச்சையை டேக் செய்துள்ளார்.

    தமிழில் மேம்பாடு

    தமிழில் மேம்பாடு

    கூகுள் சிஇஓவான சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக அவருக்கு தனது கோரிக்கையை தமிழிலேயே டிவிட்டியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓவான பிறகு தமிழர்களும் பயன்பெரும் வகையில் கூகுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    விளக்கம்

    இந்நிலையில் கூகுள் மேப்பில் தமிழிலேயே செல்லும் திசையின் பெயர்களை பார்க்க முடியும் என அவரது டிவிட்டை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான செட்டிங்ஸை எப்படி மாற்றுவது என்பது என்பது குறித்தும் இயக்குநர் சீனுராமசாமிக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

    தமிழிலேயே பெறலாம்

    மேலும் ஒருவர் நீங்கள் கைப்பேசியை தமிழில் மாற்றினால் கூட போதும், கூகுள் மேப்பை திசைகளை தமிழிலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    மட்டுமே நம்பக்கூடாது

    அதே நேரத்தில் கூகுள் மேப்பை நம்பலாம்.. குகூள் மேப்பை மட்டுமே நம்பக்கூடாது.. அனுபவரீதியாக சொல்கிறேன்.. என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Director Seenu Ramasamy demanding Google CEO Sunderpichai to Show names in tamil in google map.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X