twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்!

    |

    சென்னை: கொரோனா வார்டில் மக்க கலங்குதப்பா பாடலை பாடி சக நோயாளிகளை குஷிப்படுத்திய நபருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    Recommended Video

    I Face hair dressing கடை திறப்புவிழா | சீனு ராமசாமி, ரோபோ ஷங்கர் பேச்சு |

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    எவ்வளவு பெரிய குற்றம்.. இதுதான் சுஷாந்த் மரணத்திற்கு வழிவகுத்தது.. புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்எவ்வளவு பெரிய குற்றம்.. இதுதான் சுஷாந்த் மரணத்திற்கு வழிவகுத்தது.. புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்

    மக்க கலங்குதப்பா

    மக்க கலங்குதப்பா

    அந்த வகையில் கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா பாடலுக்கு நடனமாடி சக நோயாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    அவரது நடனத்தை பார்த்த மற்ற நோயாளிகள் கைகளை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நபர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி அவரை பாராட்டியுள்ளார்.

    மாற்றிவிட்டார்

    மாற்றிவிட்டார்

    மேலும் தனது அடுத்தப்படத்தில் அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்றையே நம்மை விட்டு வழியனுப்பும் பாடலாக 'மக்க கலங்குதப்பா' பாடலை இவர் இங்கே மாற்றி விட்டார்.

    உண்டு வாய்ப்பு

    உண்டு வாய்ப்பு

    நீர் விரும்பினால் உமக்கு எனது அடுத்த படத்தில் நடிக்கவும் உண்டு வாய்ப்பு என பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்த தர்மதுரை படத்தை சீனு ராமசாமிதான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Seenu Ramasamy giving chance to a corona patient who danced in corona ward for Dharmadhurai song. He also praised the person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X