இடிமுழக்கம் படத்துக்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு இசையமைச்சுருக்காரு…சீக்ரெட்டை வெளிப்படுத்திய சீனு ராமசாமி

சென்னை : இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் இடிமுழக்கம்.

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்திற்கு ரகுநந்தன் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இசையமைத்துள்ளதாக சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். அடுத்தடுத்து சிறப்பான படங்களை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், ஜிவி பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் என இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

மாமனிதன் படம்

மாமனிதன் படம்

முதலில் மாமனிதன் ரிலிசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ், காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சவுந்தரராஜா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இடிமுழக்கம் படத்தின் அப்டேட்டை சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இடிமுழக்கம் படம்

இடிமுழக்கம் படம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பான வகையில் நடைபெற்று வருகின்றது. படத்தில் ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதை போல ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளதாகவும் சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரகுநந்தன் மேஜிக்

ரகுநந்தன் மேஜிக்

மேலும் தன்னுடைய இசையின் மூலம் படத்தில் ரகுநந்தன் மேஜிக் செய்துள்ளதாகவும் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். இந்தப் படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான லட்சியம் படத்தின் ரீமேக் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி மறுத்திருந்தார்.நம்முடைய சமூகத்தில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர்

ஆக்ஷன் த்ரில்லர்

கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஸ்கைமேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ரகுநந்தன் இசையில் வைரமுத்து படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். வித்தியாசமாக அமைந்துள்ள படத்தின் தலைப்பை முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தனர்.

ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம்

ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம்

தான் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே ஜிவி பிரகாஷ் இசையமைத்துவிடுவார். ஆனால் இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஜிவியின் பேச்சுலர், ஜெயில் என அடுத்தடுத்த படங்கள் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், அவரது இடிமுழக்கம் படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது அவருடைய ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X