“மனித நேயத்தை காட்டு என்றால் பார்த்தீபனை காட்டுவேன்“ ..சீனு ராமசாமி புகழாரம் !

சென்னை : இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பார்த்தீபனை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

சீனு ராமசாமி ட்விட்டரில் பார்த்தீபனின் சமீபத்திய நேர்காணலை பகிர்ந்து மனித நேயத்தை காட்டு என்றால் பார்த்தீபனை காட்டுவேன் என்று கூறியுள்ளார். மேலும் பார்த்தீபனின் உரையாடல்கள் எப்போதும் புதிது, முத்தம் போல மறைக்க முடியாதது என்று புகழ்ந்து இருக்கிறார் .

Director Seenu Ramasamy has praised Parthiban on Twitter.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ட்விட்டரில் அதிகம் ஆக்டிவ்வாக இருந்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி பல விஷயங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். இதன் வாயிலாக நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்தீபனின் நேர்காணல் ஒன்றை பார்த்து வியந்து போன சீனு ராமசாமி அந்த நேர்காணலை பகிர்ந்து பார்த்தீபனை புகழ்ந்துள்ளார்.

Director Seenu Ramasamy has praised Parthiban on Twitter.

அந்த நேர்காணலில் பார்த்தீபன் மனித நேயம் தான் உலகில் சிறந்தது என் முதல் படத்தில் இருந்து தான் எடுக்கும் அத்தனை படங்களிலும் மனித நேயம் பற்றி தான் பேசி வருகிறேன், பேசுவேன் என்று கூறியுள்ளார். மேலும் இங்கு ஆயுதங்கள் எதற்கு மனிதே நேயம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்றும் கூறியுள்ளார். பார்த்தீபனின் இந்த வார்த்தைகளை பாராட்டியே சீனு ராமசாமி ட்விட்டரில் பேசியுள்ளார் .

Director Seenu Ramasamy has praised Parthiban on Twitter.

சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவை பார்த்த பார்த்தீபன் அதிகாலையில் அதிக மகிழ்ச்சி என்று கூறி நன்றி தெரிவித்திருக்கிறார். பார்த்தீபன் தற்போது கொரோனாவால் விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார் மேலும் தன் அடுத்த படத்திற்கான கதையையும் சரி செய்து வருகிறார்.

இதே போல் சீனு ராமசாமியும் கொரன்டைன் நேரத்தை வெறுமென கழிக்காமல் ஜெயா பிளஸ் தொலைகாட்சிகாக எடுக்க பட்ட ஒரு கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு வரிகள் எழுதி கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கு தன் வீட்டில் இருந்தபடியே வரிகள் எழுதி அது பாடலாக சிறப்பாக வர தன் வீட்டில் இருந்த படியே வீடியோ காண்பிரன்ஸ் மூலம் உதவியுள்ளார் . இதனாலே சீனுக்கு பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Director Seenu Ramasamy has praised Parthiban on Twitter.

இயக்குனர் பார்த்தீபன் அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்ப கட்டபணியில் இருக்கிறார் பார்த்தீபன். மேலும் இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X