இயக்குநர் சீனுராமசாமியின் ‘மேகங்களின் பேத்தி‘.. புதிய கவிதை தொகுப்பு!
சென்னை: இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ஆறாவது கவிதைதொகுப்பான 'மேகங்களின் பேத்தி' எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் 38வது பேரவை விழாவில் நேற்று வெளியிடப்பட்டது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமாணே உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனி ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அதன் பின் அவர் இயக்கிய நீர்பறவை, தர்மதுரை திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தமன்னா ஆகியோர் நடித்த இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி: இந்த படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு சீனுராமசாமியின் இயக்கத்தில், 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில், ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம், அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளில், ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'கோழிப் பண்ணை செல்லதுரை' படம் தான்.'
மேகங்களின் பேத்தி: இயக்குநர் சீனு ராமசாமி, இயக்குநராக மட்டுமில்லாமல், எழுத்தாளராகவும் கவிதைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் காற்றால் நடந்தேன், புகார் பெட்டியின் மேல் படுத்துறங்கும் பூனை, நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்,கோயில் யானையின் சிறுவன் போன்ற கவிதை தொகுப்புகள் புத்தக பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது, சீனு ராமசாமியின் ஆறாவது கவிதைதொகுப்பான 'மேகங்களின் பேத்தி' எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் 38வது பேரவை விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவர் விஜய் மணிவேல் வெளியிட முன்னாள் தலைவர் பால சாமிநாதன் பெற்றுக் கொண்டார். உடன் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுத்தாளர் சு. வேணுகோபால் ஆகியோரும் நூலின் பிரதியை பெற்றுக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











