டவுசர் போட்டுவந்த ஜிவி பிரகாஷ்.. வெளியே அனுப்பிய பிரபல இயக்குநர்.. வரலாற்று தவறு என வருத்தம்!
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் நெருங்கிய உறவினர் என்றவகையில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். இருந்தபோதிலும் தன்னுடைய சொந்த திறமையால் இவர் முன்னணி இசையமைப்பாளராக தற்போது சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது இசையில் சமீபத்தில் வெளியான அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன.
ஜிவி பிரகாஷ் தன்னுடைய 19வது வயதிலேயே இசையமைப்பாளராக வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக மெலடியில் உருவாகியிருந்த உருகுதே பாடல் தற்போதும் ரசிகர்களை உருக வைத்துக் கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளராக தன்னுடைய 19வது வயதிலேயே சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து இசை அசுரனாக 100 படங்களுக்கும் மேல் இவர் இசையமைத்து விட்டார். மேலும் நடிகராகவும், தயாரிப்பாளர், பாடகர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுததிவரும் ஜிவி பிரகாஷ், நடிகராகவும் 25 படங்களை தாண்டியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் உறவினர் என்ற அடையாளம் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய சொந்த திறமையால் இவர் பல ஆண்டுகளை கடந்து சினிமாவில் நீடித்து வருகிறார். இவரது பல படங்கள் கொண்டாட்டமான இசையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
நடிகராகவும் மாஸ்: சமீபத்தில் இவரது இசையில் ஒரே நேரத்தில் வெளியான அமரன், லக்கி பாஸ்கர் என இரு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் இசையமைத்தும் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக கிங்ஸ்டன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக டார்லிங் என்ற படம்மூலம் சினிமாவில் நடிகராக என்ட்ரி கொடுத்த இவர், நடிப்பையும் இசையமைப்பையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து வருகிறார். இதனிடையே அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகளையும் கொடுத்து வருகிறார்.
சீனு ராமசாமி வருத்தம்: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குறித்து பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது பேட்டியொன்றில் பகிர்ந்த தகவல், ரசிகர்களை அதிகமாக கவனிக்க வைத்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன், தர்மதுரை போன்ற பல படங்களை கொடுத்துள்ள சீனு ராமசாமி, தமிழ் சினிமாவின் சிறப்பான இயக்குநராக பார்க்கப்படுபவர். இவரது முதல் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான் என ஜிவி பிரகாஷை தயாரிப்பாளர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது பார்க்கையில டவுசர் போட்டு ஜிவி பிரகாஷ் வந்ததாகவும் அவரிடமே தம்பி மியூசிக் டைரக்டரை கூப்பிடு என்று தான் கூறியதாகவும் சீனு ராமசாமி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.
வரலாற்று தவறு: இதை கேட்ட அந்த சிறுவன், நான்தான் மியூசிக் டைரக்டர் என்று கூறியதாகவும் இதைகேட்டு, உனக்கு அனுபவம் இருக்கிறதா, நீ படத்திற்கு மியூசிக் செஞ்சிடுவியா என்று தான் கேட்டு, அந்த சிறுவனை ஜிவி பிரகாஷை வெளியே அனுப்பிவிட்டதாகவும் அதுதான் தான் செய்த வரலாற்று பிழை என்றும் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ், தனியாக இசையமைப்பாளராக தன்னை சினிமாவில நிலைநிறுத்தியுள்ளார். முன்னதாக ஏஆர் ரஹ்மான் இசையிலும் இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











