twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாமனிதன் கதையை முதலில் அவரிடம் தான் கூறினேன்.. விரைவில் நல்ல செய்தி.. இயக்குநர் சீனு ராமசாமி தகவல்!

    |

    சென்னை: மாமனிதன் திரைப்படம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவீட் வைரலாக வருகிறது.

    கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. 2010ஆம் ஆண்டு சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதி, தன்ஷிகா ஆகியோரின் நடிப்பில் தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார்.

    மியூசிக்கும் தெரியாது …. நடிக்கவும் வராது… உணர்ச்சி பொங்க பேசிய விஜய் ஆண்டனி !மியூசிக்கும் தெரியாது …. நடிக்கவும் வராது… உணர்ச்சி பொங்க பேசிய விஜய் ஆண்டனி !

    இந்தப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இதனை தொடர்ந்து நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

    விஜய் சேதுபதியுடன் 3 படங்கள்

    விஜய் சேதுபதியுடன் 3 படங்கள்

    தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுவரை விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகிய 3 படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

    தற்போது மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் விஜய் சேதுபதிதான் லீடிங் ரோலில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பேனர் நிறுவனம் தயாரிக்கிறது.

    யாரிடம் கதை சொல்லப்பட்டது?

    யாரிடம் கதை சொல்லப்பட்டது?

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போகிறது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி, மாமனிதன் கதையை யாரிடம் எல்லாம் சொல்லப்பட்டது என்பது குறித்து கூறியுள்ளார்.

    மிக அருகில் நல்ல சேதி

    மிக அருகில் நல்ல சேதி

    இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மாமனிதன் படத்தின்

    கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே" என்றார்.
    பிரபுதேவா கண்கலங்கினார். ஹிந்தி படத்தால் அவர்
    வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.. மிக அருகில் நல்ல சேதி.. என பதிவிட்டுள்ளார்.

    கடந்து காத்திருக்கிறோம்

    கடந்து காத்திருக்கிறோம்

    இதன்மூலம் மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே சீனு ராமசாமியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இந்த ஒரு செய்தியை கேட்கத்தான் நாட்களையும் மாதங்களையும் ஆண்டுகளையும் கடந்து காத்திருக்கிறோம் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அவர் படம்தான் ஓடலயே..

    அவர் படம்தான் ஓடலயே..

    அதேநேரத்தில் பல நெட்டிசன்கள் இனி விஜய் சேதுபதி படம் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதில்லை என விமர்சித்துள்ளனர்.

    விஜய் சேதுபதி படம்தான் ஓடவேமாட்டுதே அப்புறம் ஏன் அவரையே வைத்து எடுக்கிறீர்கள் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்.

    லாக்டவுன் போட்டு விடப்போகிறார்கள்

    லாக்டவுன் போட்டு விடப்போகிறார்கள்

    இன்னும் சில நெட்டிசன்கள் காத்திருக்கிறோம். சீக்கிரம் படத்தை ரிலீஸ் செய்து விடுங்கள்... பின்னர் மீண்டும் லாக்டவுன் போட்டு விடப்போகிறார்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

    தர்மதுரை - பொருந்தவே இல்லை

    தர்மதுரை - பொருந்தவே இல்லை

    இயக்குநர் சீனு ராமசாமியின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், தென்மேற்கு பருவக்காற்று-க்கு விஜயசேதுபதி பொருத்தம். தர்மதுரை படத்திற்கு விஜய்சேதுபதி அனாவசியம்தான். கல்லூரி மாணவன் பாத்திரத்திற்கு அவர் பொருந்தவே இல்லை. பார்த்து பார்த்து புளித்துப் போன அதே நடிப்பைத் தவிர வேறெதையும் செய்யாத அவரை மாற்ற ஆவண செய்க! என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெரியதொரு வெற்றி பெற வாழ்த்துகள்

    பெரியதொரு வெற்றி பெற வாழ்த்துகள்

    மற்றொரு ரசிகரான இவர், இன்றைய வெற்றி இயக்குனர்களில், வன்முறையை நம்பாமல் படத்தின் 'content'ஐ நம்பி படமெடுப்பவர் நீங்கள்... மீண்டும் பெரியதொரு வெற்றி பெற வாழ்த்துகள்.. என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Director Seenu Ramasamy tweet goes viral. He has tweeted about Maamanithan film and says Very soon a good news.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X