Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சூப்பர் ஆசையை வெளியிட்ட இயக்குநர் சீனு ராமசாமி
சென்னை : தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் சீனு ராமசாமி.
தொடர்ந்து சிறப்பான படங்களை அளித்து தன்னை சிறப்பான இயக்குநராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
இசைவாணி சொன்னப்போ மட்டும் பொங்குனீங்க... ஹவுஸ்மேட்ஸை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!
இந்நிலையில் தற்போது பென்னி குவிக் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி சிறப்பான படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, தர்மதுரை என இதுவரை 7 படங்களை அவர் இயக்கியுள்ளார். இந்தப் படங்களின் கேரக்டர்கள் மற்றும் திரைக்கதை எப்போதும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து நிற்பவை.

சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து
தொடர்ந்து சமூக வலைதளத்திலும் அவர் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,, திரையரங்குகளில் திருவிழா காண்பதற்கு ரஜினிகாந்த் பூரண நலம் பெற்றும் இல்லம் திரும்ப அன்பும் பிரார்த்தனையும் செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாமனிதன் படம் சமர்ப்பணம்
இதேபோல அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தினை திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் யுவனின் அம்மா ஜீவா அவர்களுக்கும் உளப்பூர்வமாக சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில் வெயில் காலத்தில் வேப்பமரத்தின் அணில் போல தனது வாழ்வுக்கு நிழல் தந்தவர் அகிலா பாலுமகேந்திரா என்றும் அவர் கூறியுள்ளார்.

3 படங்கள் தயார்
தற்போது இவரது இயக்கத்தில் இடிமுழக்கம், மாமனிதன், இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் சீனு ராமசாமி.

இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ்
ஜிவி பிரகாஷ், காயத்ரி அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இடிமுழக்கம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனு ராமசாமியின் விருப்பம்
இந்நிலையில் கர்னல் பென்னிகுவிக்கின் வாழ்க்கை சரிதத்தை படமாக எடுக்க விருப்பப்படுவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த காசில் கட்டி முப்போகம் விளைய செய்தவர் கர்னல் பென்னி குவிக். இவர் தென் மாவட்ட மக்களின் கடவுளாக போற்றப்படுபவர்.