Sekhar Kammula: ரொமாண்டிக்கிலிருந்து மாஃபியா கதைக்களத்திற்கு தாவிய சேகர் கம்முலா.. டி51 அப்டேட்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கேப்டன் மில்லர் படம் தனுஷிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. தான் ஏற்கும் கேரக்டர்களை மிகச்சிறப்பாக மாற்றுவதில் வல்லவராக காணப்படும் தனுஷ், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.
முன்னதாக டி50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்கியுள்ளார் தனுஷ். எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் தனுஷும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கேங்ஸ்டர் படமாக டி51 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 12ம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியானது. பொங்கலையொட்டி வெளியான இந்தப் படம் பீரியட் படமாக உருவாகி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக தனுஷ் அதிகப்படியான மெனக்கெடலை செய்துள்ளார். வழக்கமாக ஒரு படத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் வழக்கமுடைய தனுஷ் இந்தப் படத்திற்கு 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து சிறிதும் இடைவெளி எடுத்துக் கொள்ளாத தனுஷ், உடனடியாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் கேமியோ ரோல்களில் நடித்து வருகின்றனர்.
மாஃபியா கதைக்களத்தில் டி51 படம்: இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள டி51 படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் நாகார்ஜூனாவின் போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் நடிகர் தனுஷ் இணையவுள்ளார். ராஷ்மிகா மந்தனா. ரொமாண்டிக் படங்களை இயக்கி அதன்மூலம் வரவேற்பை பெற்றுவரும் இயக்குநர் சேகர் கம்முலா இந்தப் படத்தில் மாஃபியா கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார்.
இயக்குநர் சேகர் கம்முலா: சேகர் கம்முலாவின் இந்த மாறுபட்ட முயற்சி ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த காம்பினேஷனும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் பான் இந்தியா நாயகி ராஷ்மிகா மந்தனா தனுஷிற்கு ஜோடியாகியுள்ள நிலையில் படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தனுஷின் அடுத்தடுத்து மூன்று படங்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்து அவரது நடிப்பில் மற்றும் இயக்கத்தில் படங்கள் தயாராகி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











