Dhanush: தனுஷ்கிட்ட கதை சொல்ல தயக்கமா இருந்துச்சு.. ஆனா அவர் செஞ்சது.. குபேரா பட இயக்குநர் வியப்பு!

சென்னை: நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள குபேரா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் ரிலீசாகவுள்ளது. அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் உருவாக்கம் குறித்த பல சுவாரசியங்களை இயக்குநர் சேகர் கம்முலா தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

தனக்கு பரீட்சயமே இல்லாத தனுஷிடம் குபேரா படத்தின் கதையை தான் விவாதிக்க தயக்கம் காட்டியதாகவும் ஆனால் அதற்கு தனுஷ் தன்னிடம் எப்படி ரியாக்ட் செய்தார் என்பது குறித்தும் சேகர் கம்முலா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்பினேஷன் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

dhanush kubera movie sekhar kammula
குபேரா படம்: நடிகர் தனுஷின் குபேரா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது/ இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி முடித்துள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக நாகர்ஜுனா இணைந்துள்ளார். இந்த புதிய காம்பினேஷன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் தனுஷ் யாசகர் தோற்றத்தில் காணப்பட்டது படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்நிலையில் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளன.

தனுஷ் படங்கள்: தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை மற்றும் குபேரா படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன. இதில் முதல் இரண்டு படங்கள் அவரது இயக்கத்திலேயே வெளியாக உள்ள நிலையில் குபேரா படம் மட்டுமே சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில் குபேரா படம் குறித்து இயக்குநர் சேகர் கம்முலா அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் கதை உருவான நிலையில் கதையை தனுஷிடம் சொல்வதற்கு முதலில் தனக்கு தயக்கமாக இருந்ததாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சேகர் கம்முலா தயக்கம்: தனக்கு முன்னதாக தனுஷிடம் எந்த பழக்கமும் இல்லாத நிலையில் அவரிடம் எப்படி பேசுவது என்ற தயக்கம் இருந்ததாகவும் இந்த நிலையில் தான் அவருக்கு கால் செய்ததாகவும் ஆனால் அவரோ மிகவும் உற்சாகத்துடன் தன்னுடைய முந்தைய படங்கள் குறித்து தன்னிடமே பாராட்டி பேசியதாகவும் சேகர் கம்முலா தன்னுடைய வியப்பை தெரிவித்துள்ளார். இதனிடையே அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள குபேரா படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்பினேஷன் மிகவும் புதியதாக இருக்கும் என்றும் சேகர் கம்முலா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இருவருமே உச்ச நட்சத்திரங்களாக இருந்த நிலையிலும் பழகுவதற்கு எளிமையானவர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.

அருமையான நட்பு & ஆழமான அன்பு: இருவரிடமும் அருமையான நட்பும் ஆழமான அன்பும் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்தும் சேகர் கம்முலா தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் கமிட்டான போது ஒரு பக்கம் அனிமல் படத்திலும் மறுபக்கம் புஷ்பா 2 படத்திலும் அவர் மிகவும் பிஸியாக இருந்ததாகவும் ஆனால் இடையில் குபேரா படத்தில் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போதும் அவர் தன்னுடைய சோர்வை வெளிக்காட்டியது இல்லை என்றும் சேகர் கம்முலா மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X