அப்போ அது ரம்பா தொடை இல்லையா?.. விஜய் படத்துல நடந்த பெரிய சீட்டிங்.. அம்பலப்படுத்திய இயக்குநர்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தில் ரம்பாவுக்கு பதிலாக டூப் போட்டு பாடல் காட்சிகளை படமாக்கியதாக அந்த படத்தின் இயக்குநர் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது லேசு பட்ட காரியமில்லை. நடிகர்கள் கொடுத்த கால்ஷீட்டுக்கு மேல் ஒரு நாள் ஆகி விட்டாலும் வேறு படத்துக்கு கிளம்பி சென்று விடுவார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் பேட்ச் வொர்க் செய்துதான் பல படங்களை இயக்குநர்கள் ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஆனால், ரம்பாவுக்கு பதிலாக இன்னொரு பெண்ணை வைத்து 45 ஷாட்டுகளுக்கு மேல் டூப் போட்டு எடுத்ததாக இயக்குநர் செல்வ பாரதியே பேட்டி அளித்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
வண்ண நிலவே பாட்டு: செல்வ பாரதி இயக்கத்தில் நடிகர் விஜய் நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரியமானவளே என 2 ஃபீல் குட் மூவிக்களில் நடித்துள்ளார். இதில், நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற அந்த "வண்ண நிலவே" பாடல் இன்று வரை பல விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது. இந்நிலையில், அந்த பாடலில் பல காட்சிகளில் ரம்பா நடிக்கவே இல்லை என செல்வ பாரதி ஷாக் கொடுத்துள்ளார்.

ரம்பா கிளம்பி போயிட்டா: நினைத்தேன் வந்தாய் படத்தில் கடைசியாகத்தான் அந்த "வண்ண நிலவே" பாடலை படமாக்கினேன். அதற்குள் ரம்பா இன்னொரு படத்தில் கமிட் ஆகி அங்கே நடிக்க போயிட்டா, முதல் பட இயக்குநர் என்பதால், நான் கூப்பிட்டும் அவர் வரவில்லை. அதனால் எனக்கு ரொம்ப டென்ஷனாகி விட்டது. உடனே ரம்பாவோட டிரெஸ்ஸை மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க என சொல்லிட்டு, அங்கே இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தான் அந்த பாடலின் பல காட்சிகளை எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
45 ஷாட்: அதிலும், ஒன்று இரண்டல்ல ஒட்டுமொத்தமாக 45 ஷாட்கள் ரம்பா இல்லாமலே அந்த பாடலை படமாக்கினேன் என்றும் இதுவரை அந்த ரகசியத்தை எங்கேயும் சொல்லவில்லை என இயக்குநர் செல்வ பாரதி சமீபத்திய பேட்டியில் சொல்லி உள்ளார்.
ஏமாந்துட்டோமே: அந்த பாடலில் ரம்பாவின் முகத்தை காட்டவில்லை என்றாலும் அந்த தொடையழகை பார்த்து இத்தனை நாள் ஜொள்ளு விட்டது எல்லாம் வீணாப்போச்சே என்றும் அந்த படத்தின் டிக்கெட் இருந்தால் யாராவது கொடுங்க, கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போடலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பல படங்களில் ஹீரோவுக்கு பதில் டூப்கள் தான் ஸ்டன்ட் செய்து வரும் நிலையில், நடிகர்களுக்குத்தானே ஃபயர் விட்டு வருகிறோம் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications











