Selva Raghavan: எது நடந்தாலும் பல்லக் கடிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவம்

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக அறியப்படுகிறார். பலரும் பல நூறு கோடிகளை செலவு செய்து படங்களை எடுக்கும் போது, செல்வா தனது கதை மற்றும் திரைக்கதையால் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும் இயக்குநராக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவங்களை சொல்லி வரும் செல்வராகவன் இன்று அதாவது ஜூலை 23ஆம் தேதி தெரிவித்துள்ள தத்துவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

செல்வராகவன் இயக்குநராக, தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் நடிகராவும் பெயர் வாங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் ஏற்பட்டுவிடுகிறது. இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் செல்வராகவன் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல், இந்த படத்தை இயக்கி முடிக்கும் வரை வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகமாட்டேன் என முடிவெடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

செம பிஸி: இப்படி இருக்கும்போது, இந்த படம் மட்டும் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 என அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் வாழ்க்கைத் தத்துவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அது ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தத்துவம்: அதாவது இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், " நாம் பொதுவாக நண்பர்களிடம் பேசுகையில், தெரிந்தவர்களிடம் பேசுகையில், எதிர்காலத்தில் இது மட்டும் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும், அந்த லவ்வு மட்டும் ஒர்க் -அவுட் ஆகி கல்யாணம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த வீடு வாங்கினால் அற்புதமா இருக்கும்ல, இது நடந்ததுனா... அது நடந்ததுனா.. என போசுவோம். ஆனால் எது நடந்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும், போர்தான் அடிக்கும். வலியாகத்தான் இருக்கும். பல்லைக் கடித்துக் கொண்டு தான் நாம் அந்த மொமெண்ட் கடந்து ஆகனும்.

Director Selva Raghavan Philosophy Video Goes Trending On Instagram
Photo Credit:

கடவுள் கொடுத்த பரிசு: எது உண்மை என்றால், இந்த மொமெண்ட். அதனால்தான் குங் பூ பாண்டாவில் ஒரு டயலாக் வரும். அதாவது ஆங்கிலத்தில் தற்போதைய தருணத்தை Present எனக் கூறுகிறார்கள். காரணம், அது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசு. இந்த மொமெண்ட்டை என்ஜாய் செய்து பழக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் அப்டேட் கேட்டும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதேபோல் சில இணையவாசிகள் ’அக்கறைக்கு இக்கறை பச்சை போலத்தான் வாழ்க்கை’ எனவும், ’வீட்டுக்கு வீடு வாசப்படி’ எனவும் சொலவடைகளில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X