பிரபல இயக்குனரின் தந்தை கொரோனாவுக்கு பலி… திரைத்துறையில் தொடரும் சோகம் !
சென்னை : பிரபல இயக்குனர் செல்வாவின் தந்தை கொரோனா தொற்றால் பலியாகி உள்ளார்.
அவருக்கு வயது 85, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்
அவரின் இறுதிச்சடங்கு வியாசர்பாடியில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு
COVID-19 இன் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபித்து வருகிறது. மேலும் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. இப்போது, பிரபல இயக்குனர் செல்வாவின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

காலமானார்
85 வயதான செல்வாவின் தந்தை பக்தவச்சலத்திற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வியாசர்பாடியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி
இயக்குனர் செல்வாவின் தாயாருக்கும், இயக்குனர் செல்வாவுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செல்வாவுக்கும் அவரது அம்மாவுக்கும் காய்ச்சால் மிகவும் தீவிரமாக உள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரபல இயக்குனர்
இயக்குனர் செல்வா, நீலா மாலா, மற்றும் சித்திரைப்பாவை போன்ற தொடர்கள் மூலம் திரையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய செல்வா, அமராவதி, கர்ணன், புதையல், தொட்டா மற்றும் நான் அவன் இல்லை போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











