அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநரின் மகன் திருமணம்.. தல வருவாரா ?

சென்னை : 'அமராவதி' என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது.தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குநர் செல்வா.

Recommended Video

சொந்த தொழில் ஆரமிக்கும் சோனியா | ACTRESS SONIA AGARWAL EXCLUSIVE | FILMIBEAT TAMIL

'அமராவதி ' படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இவர் அஜித்தை வைத்து தலைவாசல் ,அமராவதி படங்களையும் அர்ஜுனை வைத்து கர்ணா , ஆணை,மணிகண்டா படங்களையும் கார்த்திக்கை வைத்து சிஷ்யா ,பூவேலி, ரோஜாவனம் படங்களையும் இயக்கியவர்.

சத்யராஜுடன் சிபி

சத்யராஜுடன் சிபி

பிரசாந்தை வைத்து ஆசையில் ஒரு கடிதம் ,பார்த்திபன் நடிப்பில் உன் அருகே நானிருந்தால், பார்த்திபன், பிரபு தேவாவை வைத்து ஜேம்ஸ்பாண்டு போன்ற படங்களை இயக்கியவர். சிபிராஜை ஸ்டூடண்ட் No1, படத்தில் அறிமுகம் செய்தவர், அதே சிபிராஜை அவரது தந்தை சத்யராஜுடன் இணைத்து ஜோர் படத்தையும் இயக்கியவர்.

முற்றிலும் புதுமுகங்களை

முற்றிலும் புதுமுகங்களை

புதையல் படத்தில் மம்முட்டியையும் அரவிந்தசாமியையும் இணைந்து நடிக்க வைத்தவர். ஜீவனை வைத்து நான் அவனில்லை 1, 2 பாகங்கள், தோட்டா போன்ற படங்களை இயக்கியவர். முற்றிலும் புதுமுகங்களை வைத்து நாங்க, நாடி துடிக்குது படங்களை இயக்கியவர்.

வணங்காமுடியை இயக்கும்

வணங்காமுடியை இயக்கும்

26 படங்களை இயக்கி முடித்த இவர், இப்போது தனது 27 வது படமான வணங்காமுடியை இயக்கி வருகிறார் .இதில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார். சிம்ரன் இறுதிச்சுற்று ரித்திகா ,நந்திதா ஆகியோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

டீ வி நிகழ்ச்சிகள் இயக்கி

டீ வி நிகழ்ச்சிகள் இயக்கி

சினிமாவுக்கு வரும்முன் சின்னத்திரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தவர் செல்வா என்பது குறிப்பிடத்தக்கது .தூர்தர்ஷனில் சித்திரபாவை, நீலா மாலா, குறிஞ்சிமலர்,ஆளுக்கொரு ஆசை தொடர்கள் பேசப்பட்ட மிகவும் புகழ் பெற்ற தொடர்களாகும்.அதே போல் சன் டிவியில் இவர் இயக்கிய சூர்யா, நந்தினி, ரன் தொடர்கள் பேசப்பட்டன.

 நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

இவர் பாரதியார் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார். யுனிசெப் நிறுவனத்திற்காக சமூக விழிப்புணர்வு படம் இயக்கியிருக்கிறார். செல்வி ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி சன் நியூஸ்க்கான இவரது புலன்விசாரணை ஆவணப்படம் பேசப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இவர் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம் உருவானபோது இவர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

அப்பாவாக தன் கடமையை

அப்பாவாக தன் கடமையை

இப்படித் தனக்கென சாதனைத் தடங்களைப் பதித்து வைத்துள்ள செல்வாவின் இயற்பெயர் செல்வகுமார்.
இவரது மகன் பொறியாளர் ராஜீவ் கர்ணாவுக்கும், பொறியாளர் மீராவுக்கும் வருகிற 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருகம்பாக்கம் ஏகேஆர் மகாலில் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் திருமணம் நடைபெற உள்ளது.

தல வருவாரா

தல வருவாரா

அரசின் கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு தல வருவாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள் பிரமாண்டங்கள் இல்லாமல் நடப்பதால் இந்த திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து வழங்க அஜித் கண்டிப்பாக வருவார் . சைலண்டாக சீக்ரெட் விசிட் செய்வார் என்று நம்பப்படுகிறது . தல வந்து விட்டால் அந்த தம்பதியருக்கு அன்றே தல தீபாவளி தான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: selva ajith செல்வா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X