இயக்குனர் செல்வா மகன் திருமணம் .. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை : அஜீத் குமாரை முதன் முதலாக தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.
அமராவதி, நான் அவனில்லை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் இயக்குனர் செல்வா.
தலைவாசல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தனது இரண்டாவது படத்தில் அஜீத்தை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சாரும். மேலும் வணங்காமுடி என்ற திரைப்படத்தை இயக்கி வரும் செல்வா லாக்டவுனில் தனது மகன் ராஜீவ் கர்ணாவின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தியுள்ளார்.

மிகப்பெரிய தாக்கத்தை
இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இயக்குனர் செல்வா இன்றளவும் தமிழ் ரசிகர்களால் போற்றப்படும் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.

அஜித்தை கதாநாயகனாக
தலைவாசல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி பதித்த இயக்குனர் செல்வா தனது இரண்டாவது திரைப்படமான அமராவதி திரைப்படத்தில் அஜித்தை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு நடிகர் விக்ரம் பின்னணி குரல் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்காமுடி
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான கர்ணா, உன்னருகே நானிருந்தால், நான் அவன் இல்லை, தோட்டா என பல வெற்றிப் படங்களை தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து அளித்த இயக்குனர் செல்வா இப்பொழுது "வணங்காமுடி" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மகன் ராஜீவ் கர்ணா
இந்த லாக்டவுனில் நடிகர் ராணா, நித்தின் உள்ளிட்ட பிரபலமான பல திரை பிரபலங்களும் திருமணங்களை மிக எளிமையான முறையில் நடத்தியதையொட்டி செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணாவுக்கும், மீரா என்பவருக்கும் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நேரில் சென்று வாழ்த்து
இந்த திருமணத்திற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் மற்றும் இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூர் நேரில் சென்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











