“ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா“… வாழ்க்கை தத்துவத்தை அழகா சொன்ன செல்வராகவன் !

சென்னை : இயக்குனர் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி சாணி காயிதம், பீஸ்ட் படங்களிலும் நடித்து வருகிறார்.

ருத்ரதாண்டவம் இயக்குனர் மோகன்.ஜி அடுத்து இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல வெற்றி படங்கள்

பல வெற்றி படங்கள்

இயக்குனர் செல்வராகவன் ஒரு வித்தியாக விரும்பி என்று சொல்லலாம் அவரின் ஒவ்வொரு படைப்பும் பல கதைகளை சொல்லும். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு, இவர், துள்ளுவதோ இளமை , காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன. என்.ஜி.கே. உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது தம்பி தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகராக

நடிகராக

இயக்குனராக இருந்த செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியமோகன் ஜி படத்திலும் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

உங்களை மதிக்கவில்லையா

உங்களை மதிக்கவில்லையா

இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து திரைப்படம் சார்ந்த புதிய தகவல்கள், ரசிகர்களுக்கு பதில் என பலவற்றை பதிவிடுவார். தற்போது செல்வராகவன் வாழ்க்கை தத்துவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.என பதிவிட்டுள்ளார்.

என்னத்தான் ஆச்சு

என்னத்தான் ஆச்சு

செல்வராகவனின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வந்தாலும் செல்வராவனுக்கு என்னத்தான் ஆச்சு என்றும்.. தொடர்ந்து பிலாஷபி பேசி வருகிறாரே என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X