கூடிய விரைவில் புதுப்பேட்டை 2 படம் துவக்கம்? ஹின்ட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்
சென்னை : புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கடந்த வருடத்தில் டைரக்டர் செல்வராகவன் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமான நிலையில், தற்போதுவரை அதுகுறித்த எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
இன்றைய தினம் புதுப்பேட்டை படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடிவரும் நிலையில் அதுகுறித்த ஹின்ட்டை தற்போது செல்வராகவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனுஷிற்கு பெயர்தந்த படம்
புதுப்பேட்டை படம் தனுஷ், ஸ்நேகா, சோனியா அகர்வால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளிவந்து தனுஷிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தன்னுடைய இயல்பான நடிப்பால் படத்தில் ஸ்கோர் செய்திருந்தார் தனுஷ். படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கும் நல்ல பெயரை இந்த படம் பெற்றுத் தந்தது.

படக்குழுவினர் கொண்டாட்டம்
இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழு கொண்டாடி வருகிறது. படத்தின் நினைவுகளை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் அறிவிப்பு
கடந்த ஆண்டில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பது குறித்த அறிவிப்பை டைரக்டர் செல்வராகவன் வெளியிட்டிருந்தார். தனுஷ் -செல்வராகவன் இருவரின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வெளிவருவது குறித்து குறிப்பாக புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

செல்வராகவன் ஹின்ட்
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்ட செல்வராகவன், மேலும் படத்தில் நடித்திருந்த அனைவரையும் டேக் செய்துள்ளார். மேலும் இந்த பயணம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











