Selvaraghavan: கல்லு மட்டும்தான் வச்சேன்.. அவரே செதுக்கிட்டார்.. தனுஷ் குறித்து செல்வராகவன் ஓபன்!
சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ராயன். தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ராயன் படம் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் மிக சிறப்பாக உருவாகியுள்ளது/ கடந்த மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தமாதம் 26ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் இசையமைப்பை ஏஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
சிறப்பான வரவேற்பு: இந்த படத்தில் முன்னதாக இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை நினைவுபடுத்தும் வகையில் தனுஷ் என்ட்ரியில் படத்தில் அவரது கேரக்டரை குறிப்பிடும்வகையில் டான்சர்கள் ஆடல் பாடலுடன் வரவேற்றனர். இதையடுத்து ரசிகர்களும் தனுஷை மிகச் சிறப்பாக மற்றும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதையெல்லாம் தாண்டி தனுஷ் முன் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார். வழக்கம் போல பாரம்பரிய உடையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலுக்கு பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ள அபர்ணா முரளி மற்றும் சந்திப் கிஷன் இருவரும் தற்போது ஸ்டேஜிலும் அந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது.
தனுஷை நான் செதுக்கவில்லை: இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் நடிகர் தனுஷை தான் செதுக்கவில்லை என்றும் தான் கல்லை மட்டுமே வைத்து விட்டு சென்றதாகவும் அவரே தன்னைத்தானே செதுக்கி கொண்டார் என்றும் பேசியது அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து இயக்குநராக தனுஷ் இன்னும் அதிகமான படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரது நல்ல மனதுக்கு அவருக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்றும் அவர் பேசிய நிலையில், ரசிகர்களின் ஆரவாரம் அடங்க பல நிமிடங்கள் ஆனது.
தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்: நடிகர் தனுஷ் தன்னுடைய ஆரம்ப கால படங்களில் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்தார். அவருக்கு மிகப்பெரிய அடித்தளத்தை செல்வராகவன் போட்டுக் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நானே ஒருவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தன்னுடைய அண்ணன் செல்வராகவனுக்கு அழுத்தமான கேரக்டரை கொடுத்துள்ளார் தனுஷ். முதல்முறையாக இந்த படத்தின் மூலம் செல்வராகவனை அவர் இயக்கியுள்ளார்


Click it and Unblock the Notifications











