நமக்குள்ளே ஒரு விரோதி இருக்கான்.. செல்வராகவன் வெளியிட்ட வீடியோ.. நீங்க ஒரு பெரிய Genius சார்

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் செல்வராகவன். இவர் படங்களை போன்றே அவரது பேச்சும் ரசிக்கும் படியே இருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்வில் நடந்த அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்தார். சினிமாவில் இயக்குநர் செல்வராகவன் என்பது யார் என்பதை அனைவரும் தெரிந்திருப்பார்கள். நிஜ வாழ்வில் அனைவரும் வெறுக்க கூடிய மனிதனாகத்தான் இருந்திருக்கிறேன் என ஓப்பனாக பேசியவர் செல்வராகவன். இந்நிலையில், தனது சமூகவலைதளத்தில் புதிய வீடியோ ஒன்றை செல்வராகவன் வெளியிட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தான் இயக்கும் படங்களில் இருந்து வித்தியாசம் காட்ட நினைப்பவர் செல்வராகவன். காதல் என்று வரும்போது எல்லா மனிதர்களும் ஒன்று தான் என்பது போன்று தான் இருக்கும். நண்பனின் காதலியை ஹீரோ காதலிப்பது போன்ற காட்சியும் சரி சீன்களும் அவரது படங்களில் மாறவில்லை. ஆனால், தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்றே அவரை அழைப்பார்கள். என்ஜிகே படத்தின் தோல்விக்கு பிறகு பிரேக் எடுத்திருக்கும் செல்வராகவன் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

director-selvaraghavan-advice-to-fans-avoid-negative-problems

பணம் வந்தா போதும்: இயக்குநர் செல்வராகவன் மீண்டும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில், ரவி கிருஷ்ணா, அனஸ்வா ராஜன் லீட் ரோல்களில் நடிக்கின்றனர். சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் 2ஆம் பாகம் எதைப்பற்றியது என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிடுவார். அந்த வகையில் பான் இண்டியா படங்களை தரக்குறைவாக பேசியிருந்தார்.

அதில், பான் இண்டியா அசிங்கமான கலாச்சாரம் சினிமாவில் உருவாகி உள்ளது. நிறைய சண்டை இருக்கணும், குத்து பாட்டு இருக்கணும், அரை குறையா டான்ஸ் ஆடணும் இதுல எங்க சினிமா இருக்கிறது. இன்று நல்ல சினிமாக்கள் எடுத்தாலும் வாங்க ஆட்கள் இல்லை என கடுமையாக விளாசி பேசியிருந்தார். இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அதேபோன்று தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்திருககிறார்.

director-selvaraghavan-advice-to-fans-avoid-negative-problems

ஏழு முறை தற்கொலை: சமூகவலைதள பக்கத்தில் தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் தற்கொலை குறித்தும் தெரிவித்திருக்கிறார். அதில், எல்லோருடைய வாழ்விலும் இந்த ஸ்டேஜை தாண்டாதவர்கள் யாரும் இல்லை. தற்கொலை முயற்சி, மன அழுத்தம் தான். நான் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அதுபோன்ற எண்ணங்கள் கிடையாது. ஒவ்வொரு முறையும் ஒரு ஆழமான குரல் உள்ளிருந்து கேட்கும் பொறுமை கொள். பொறுமை கொள் என்று அந்த குரல் என்னுள் கேட்கும். 6 மாதம் கழித்து அதை நினைத்து எனக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. அழகான வாழ்க்கையை இழக்க இருந்தோம் என கேட்டுக்கொண்டேன். ஆகவே தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள் என பிறருக்கும் அறிவுரை வழங்கினார் செல்வராகவன்.

கடவுள் பார்த்துக்கொள்வார்: இந்நிலையில், மீண்டும் ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் அறிவுரை சொல்லும் விதமாக செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதில், :நமக்கு எல்லோருக்கும் ஒரு விரோதி இருக்கு. நினைவு தெரிந்த நாளில் இருந்து தொடங்கி நீங்கள் இறக்கும் வரைக்கும கூடவே வருவான். எங்கே எப்படி எந்த விவரமும் தெரியாது. வெளியில் தேடாதீங்க. உள்ளே நீங்க என்ன செய்தாலும் உங்களை ஒருவன் கேட்டுக்கொண்டே இருப்பான். நம் வாழ்வில் எதிர்மறையாக எது நடந்தாலும் கவலைப்பட வேண்டாம் கடவுள் பார்த்துக்கொள் என்று சொல்லி பழகுங்கள் அதனை கடவுள் பார்த்துக்காெள்வார். உங்களுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கும் முயற்சி செய்தால் எதுவும் நடக்கும்" என தெரிவித்துள்ளார். அப்போது அவரது ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். சிலர், சீக்கிரம் படம் பண்ணுங்க என்றும் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X