ஜூலை மாதத்தில் சாணிக் காயிதம் இறுதி கட்ட படப்பிடிப்பு.. அடுத்த படத்துக்கு தயாராகும் செல்வராகவன்

சென்னை: செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் சாணிக் காயிதம்.

இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சுரேஷ் செல்வராகவன் உடன் இணைந்து நடிக்கிறார்.

 ரிலீஸ் ஆகவுள்ளது

ரிலீஸ் ஆகவுள்ளது

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் விநியோகத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'. இது அவரின் முதல் படமாகும். ராக்கி திரைப்படம் திரையரங்குகள் திறந்த உடன் ரிலீஸ் ஆகவுள்ளது என விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

ஆர்வத்துடன் ரசிகர்கள்

ஆர்வத்துடன் ரசிகர்கள்

அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் தான் சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் படம் ஏதும் இது வரை வெளிவரவில்லை என்றாலும் ரிலீஸ் ஆகவுள்ள முதல் இரண்டு படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

படக்குழு திட்டம்

படக்குழு திட்டம்

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சாணிக் காயிதம் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதம் இறுதி கட்ட படப்பிடிப்பை தொடங்கி முழுவதுமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

செல்வராகன் - தனுஷ்

செல்வராகன் - தனுஷ்

இந்த படப்பிடிப்பு முடிந்த உடன் செல்வராகவன் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்க தயாராகவுள்ளதாக தெரிகிறது. தனுஷ் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய உடன் #D43ல் நடிக்கவுள்ளார் அதன் பின்னர் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X