அழகான இளவரசன் பிறந்துவிட்டார்.. சந்தோஷத்தில் செல்வராகவன் குடும்பம்.. இனிமே கலக்கல் தான்!
சென்னை: இயக்குநர் செல்வராகவனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலிக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், இப்போ மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த சந்தோஷத்தை செல்வராகவன் மற்றும் தனுஷ் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். தனுஷுடன் மீண்டும் இணைந்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை செல்வராகவன் இயக்கவுள்ளார்.காதல் கொண்டேன் ஹீரோயின்

நடிகையுடன் திருமணம்
நடிகர் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் 2006ம் ஆண்டு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தனது படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, 2010ல் விவாகரத்து செய்து கொண்டனர்.

உதவி இயக்குநருடன் காதல்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை 2011ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மூன்றாவது முறையாக கீதாஞ்சலி கர்ப்பமாகி உள்ளார். சமீபத்தில், அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் வித விதமாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டனர்.

இரு குழந்தைகள்
2011ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி கீதாஞ்சலியை திருமணம் செய்த நிலையில், 2012ம் ஆண்டு ஜனவரி மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு லீலாவதி என பெயர் வைக்கப்பட்டது. அடுத்து 2013ம் ஆண்டு அந்த தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஓம்கார் என பெயர் சூட்டப்பட்டது.

குட்டி இளவரசன்
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்திற்கான அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்ட நிலையில், அழகிய ஆண் குழந்தை செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினருக்கு பிறந்துள்ளது. ரிஷிகேஷ் என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி உள்ளோம் என செல்வராகவன் - கீதாஞ்சலி ரசிகர்களுக்கு தங்களது குட்டி இளவரசன் பெயரை அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











