ஹாப்பி பர்த்டே ஜீனியஸ் செல்வராகவன்.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
காதல் கொண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பேசும் படியாக பல படைப்புகளை கொடுத்துள்ளார்.
இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வராகவனை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சிறந்த இயக்குனர்
7g ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை கொடுத்து சிறந்த இயக்குனராக திகழ்கிறார் செல்வராகவன். செல்வராகவனின் படங்கள் வெளியான போது சோபிக்கவில்லை என்றாலும், பின்னர் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடிக்கிறது.

கீர்த்தி சுரேஷுடன்
சிறந்த இயக்குனராக உள்ள செல்வராகவன் தற்போது நடிக்கவும் தொடங்கியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "சாணி காயிதம்" படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார் செல்வராகவன். நடிகராக அறிமுகமாகவுள்ள செல்வராகவனை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அதைத்தொடர்ந்து செல்வராகவன் தனுஷை வைத்து "நானே வருவேன்" படத்தை இயக்கவுள்ளார். பின்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தையும் தனுஷை வைத்து இயக்கவுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு மிகவும் உச்சத்தில் உள்ளது.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
இன்று செல்வராகவன் இயக்கத்தில், S.J. சூர்யா நடிப்பில் 4 வருட எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும், செல்வராகவனின் பிறந்தநாளையும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இன்றைய நாள் செல்வராகவன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











