Pudhupettai 2: புதுப்பேட்டை 2விற்கு தயாராகும் செல்வராகவன்.. ரசிகர்களும் தயார் தானுங்கோ!
சென்னை: நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த படம் புதுப்பேட்டை. கடந்த 2006ம் ஆண்டில் வெளியான புதுப்பேட்டை படம் ஏராளமான ரசிகர்களின் பேவரிட். அடுத்தடுத்த வெற்றிப் படங்களின் இரண்டாவது பாகங்கள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகமும் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை தற்போது செல்வராகவனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் வேலைகள் இந்த ஆண்டிலேயே துவங்கும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் அடுத்தடுத்த பல உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர். தன்னுடைய தம்பியின் நடிப்பிலேயே அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கியுள்ள செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான என்ஜிகே மற்றும் நானே வருவேன் படங்கள் சொதப்பின. இதில் நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ள அவர் நடிப்பில் வெளியான பகாசுரன் படமும் சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதுப்பேட்டை 2 படம்: இயக்குநர் செல்வராகவன் உணர்வுபூர்வமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருபவர். அவரது படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படங்களின்மூலம் இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக அறியப்படும் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான புதுப்பேட்டை படம் தனுஷ் நடிப்பில் அவரது எவர்கிரீன் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள், திரைக்கதை, பாடல்கள், பிஜிஎம் என அனைத்தும் பேசப்பட்டன. தனுஷ் கேரியரிலும் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்தது. தற்போது பல படங்களின் இரண்டாவது பாகங்கள் உருவாகிவரும் சூழலில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
புதுப்பேட்டை 2 படத்தின் வேலைகள்: இந்நிலையில் புதுப்பேட்டை 2 படத்திற்கான வேலைகள் இந்த ஆண்டில் துவங்கவுள்ளதாக செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே மற்றும் நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி தோல்வி படங்களாக அமைந்தன. இதில் நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி சொதப்பலான முடிவையே கொடுத்தது. இந்நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்.
அழுத்தமான கதைக்களம்: நிதி பிரச்சினை காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக புதுப்பேட்டை 2 படத்தின் சூட்டிங்கில் செல்வராகவன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், அழுத்தமான கதைக்களத்தில் படம் மிகப்பெரிய அதிர்வுகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதேபோன்ற படத்தை செல்வராகவன் மீண்டும் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகராகவும் செல்வராகவன்: சாணிக்காயிதம், பீஸ்ட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து தன்னை நடிகராகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் செல்வராகவன். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான பகாசுரன் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனிடையே புதுப்பேட்டை 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளை செல்வராகவன் வரும் ஏப்ரலில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் செப்டம்பரில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











