twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானே வருவேன்..தனுஷ் ஆபத்தான ஸ்கிரிப்ட் ரைட்டர்..செல்வராகவன் ஏன் அப்படி சொன்னார்!

    |

    சென்னை : நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ந் தேதி வெளியான நிலையில் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பல தகவலை தெரிவித்துள்ளார்.

    இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.

    நானே வருவேன் கொடுத்த சூப்பர் கம்பேக்... தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் மீண்டும் தொடங்கும் ராயன்?நானே வருவேன் கொடுத்த சூப்பர் கம்பேக்... தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் மீண்டும் தொடங்கும் ராயன்?

    கதையே வேறு

    கதையே வேறு

    நானே வருவேன் படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செல்வராகவன், இந்த படத்தை பலர் ஆளவந்தான் கதை போல் இருப்பதாக கூறுகின்றனர். அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன் என்று பல படங்கள் வந்துள்ளன. ஒரே ஒரு பாயிண்டை மட்டும் எடுத்துக்கொண்டு ஆளவந்தான் படத்தோடு ஒப்பிடக்கூடாது நானே வருவேன் கதையே வேறு.

    100வது யோசித்தோம்

    100வது யோசித்தோம்

    மேலும், தனுஷ் மீண்டும் இணைந்து என்னுடன் பணிபுரிய வேண்டும் என கேட்டிருந்தார். இதனால், பல ஸ்கிரிப்ட் குறித்து இருவரும் பேசினோம். நானே வருவேன் கதை குறித்து 100 முறையாவது மெயில் மூலம் மாறி மாறி நானும் தனுஷூம் பேசியிருப்போம், பல யோசனைக்கு பின் தான் நானே வருவேன் கதையை தேர்வு செய்தோம்.

    ஆபத்தான ஸ்கிரிப்ட் டைட்டர்

    ஆபத்தான ஸ்கிரிப்ட் டைட்டர்

    தனுஷ் மிகவும் ஆபத்தான அதே வேளையில் சென்சிடிவ் ஆன ஸ்கிரிப்ட் ரைட்டர். நானே வருவேன் கதையை மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார். கதையை படித்ததும் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். இப்படி ஆழமாக பாடல், கதை எல்லாம் எப்படி எழுதுகிறார் என்றும் யோசித்து இதை அவரிடமே பல முறை கேட்டுள்ளேன் என்றார்.

    தசரா விடுமுறை

    தசரா விடுமுறை

    பெரிய பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்துடன் மோதவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தசரா விடுமுறை என தொடர்ந்து ஒரு எட்டு நாள் விடுமுறை வந்ததால், இந்த படத்தை இப்போது ரிலீஸ் செய்தோம். முன்பு பண்டிகை காலத்தில் 4 படங்கள் வெளியாகும்,மக்கள் எதை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து பார்ப்பார்கள் அது இப்போது இல்லை. அந்த பழைய பாண்டிகை கொண்டாட்டத்தை கொண்டுவர நினைத்தோம் என்றார்.

    வில்லன் தனுஷ்

    வில்லன் தனுஷ்

    நானே வருவேன் படத்தில் தனுஷ், அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் யதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். வில்லனாக மிரட்டி இருக்கும் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் பெற்று வருகிறது.

    English summary
    Naane Varuvean director selvaraghavan interesting information about Dhanush Raja
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X