Saravanan :லெஜெண்ட் சரவணனுடன் இணையும் இயக்குநர் செல்வராகவன்.. விரைவில் அறிவிப்பு?

சென்னை : தி லெஜெண்ட் படத்தின்மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் லெஜெண்ட் சரவணன்.

முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரது படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், லேசான தாடியுடன் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைபபடங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டானது.

Director Selvaraghavan joins with Actor Legend Saravanan in his next

லெஜெண்ட் சரவணனுடன் இணையும் செல்வராகவன் : பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன், ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் தி லெஜெண்ட். இந்தப் படத்தில் விஞ்ஞானியாக அவர் நடித்திருந்தார். முதல் படமாக இருந்தபோதிலும், இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் சரவணனுக்கு ஊர்வசி ரவுடேலா ஜோடியாக நடித்திருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆக்ஷன், சென்டிமெண்ட் என கலவையாக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தின் இசைச மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் சரவணன். லேசான தாடியுடன் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

Director Selvaraghavan joins with Actor Legend Saravanan in his next

கோட் ஷுட் சகிதம் அவர் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது அடுத்தப்படத்தில் அவருடன் பிரபல இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட், சாணிக்காயிதம் படங்களை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படத்தில் நடிகர் சுனில் மற்றும் யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

Director Selvaraghavan joins with Actor Legend Saravanan in his next

இந்தப் படத்தை ரங்கநாதன் இயக்கவுள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் ஹீரோ யாரென்று அவர் குறிப்பிடாத நிலையில், இந்த ட்வீட்டை லெஜெண்ட் சரவணன் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார். இதையடுத்து அந்தப் படத்தின் ஹீரோ அவர்ர்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. முதல் படத்தில் விஞ்ஞானியாக தன்னுடைய கிராமத்து மக்களுக்கு சேவை செய்யும் வகையில் நடித்திருந்தார் லெஜெண்ட்.

இந்நிலையில் இந்த அடுத்தப்படத்தின் கதை எப்படி அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதல் படத்தைக் காட்டிலும் தற்போது அவரது லுக் உள்பட மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், அவரது படத்தின் கான்செப்டும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை மொமண்ட் என்டர்டெயிமெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X