தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய செல்வராகவன் ட்வீட்... போஸ்டரும் வெளியிட்டிருக்காரு!
சென்னை : நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தன்னுடைய அண்ணனின் இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இந்தப் படம் குறித்த அடுத்த அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் அட்ராங்கி ரே, ஜகமே தந்திரம் என அடுத்தடுத்த படங்கள் ஓடிடி தளங்களில் அடுத்தடுத்து ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன. இதையடுத்து தற்போது இவரது நடிப்பில் தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

வாத்தி படம்
வாத்தி என்ற தமிழ், தெலுங்கு இருமொழி படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இதனிடையே தன்னுடைய அண்ணனின் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயக்கம் என்ன என்ற படம்த்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தனர். இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்ணனின் இயக்கத்தில் தனுஷ்
புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு இவர்கள் இணைந்துள்ள நிலையில், இந்தப் படம் எந்த மாதிரியான படம் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கிய நிலையில், இடையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் துவங்கிய சூட்டிங்
இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் துவங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் பழைய காகிதத்தில் உள்ளபடியான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான போஸ்டர்
அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் உள்ளனர். சூட்டிங் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தை செல்வராகவன் இயக்கிவரும் நிலையில், இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்து வருகிறார்.

நடிப்பிலும் செல்வராகவன்
இதனிடையே இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பில் தற்போது களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இவரது நடிப்பில் சாணிக் காயிதம் மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











