twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏமாற்றங்களை சகித்து கொண்டால் கவலைப் பட ஒன்றுமில்லை -செல்வராகவன்

    |

    சென்னை : காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் இயக்குநர் செல்வராகவன்.

    லாக்டவுனில் தன்னுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறார்.

    மகளின் கைபிடித்து… ஆனந்த யாழை மீட்டும் யுவன் சங்கர் ராஜா !மகளின் கைபிடித்து… ஆனந்த யாழை மீட்டும் யுவன் சங்கர் ராஜா !

    ஏமாற்றங்கள் மற்றும் அதை கடந்துவரும் வழி குறித்து இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    காதல் கொண்டேன் படம் மூலம் கடந்த 2003ல் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இயக்குநர் செல்வராகவன். தன்னுடைய தம்பியான தனுஷை வைத்து அவர் இயக்கிய இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை சிறந்த இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    விமர்சனரீதியில் வெற்றி

    விமர்சனரீதியில் வெற்றி

    இவருடைய அடுத்தடுத்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று அவரை இந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞனாக அடையாளப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படமும் சிறந்த படமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதேஸ்வரன் பாராட்டு

    மாதேஸ்வரன் பாராட்டு

    இந்நிலையில் இவர் தற்போது வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவரது இந்த புதிய முயற்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவரை இயக்கிவரும் இயக்குநர் மாதேஸ்வரன் செல்வராகவன் ஆகச்சிறந்த நடிகர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஏமாற்றம் குறித்த பதிவு

    ஏமாற்றம் குறித்த பதிவு

    தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளையும் தன்னுடைய குடும்பத்தினருடன் தான் மகிழ்ச்சியாக செலவழித்துவரும் தருணங்களையும் பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது ஏமாற்றங்களை சகித்துக் கொண்டால் கவலைப்பட என்ன இருக்கிறது என்று கேள்வியுடன் புதிய பதிவை செய்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Director Selvaraghavan makes new tweet on his twitter page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X