செல்வராகவன்: இவ்ளோ காய்ஞ்சி போயா கிடக்குறீங்க.. ரசிகர்களுக்கு செல்வராகவன் கேள்வி!

சென்னை: நடிகர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தில் துவங்கிய இவரது இயக்குநர் பயணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான நானே வருவேன் படம்வரையில் தொடர்ந்துள்ளது.

இவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களுக்காகவும் இரண்டாவது பாகங்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இவரோ, நடிகராக அடுத்தடுத்த படங்களில் சாவகாசமாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடித்திருந்தார் செல்வராகவன். ஆனாலும் இவரை இயக்குநராக பார்க்கவே ரசிகர்கள் வெயிட்டிங்.

selvaraghavan raayan dhanush

இயக்குநர் செல்வராகவன்: ஆன்மிகம் என்பது விவரிக்க முடியாத அனுபவம். அது ஒரு உணர்வு என்ற நிலையில் அதை வைத்து பணம் பண்ணும் நோக்கத்திலேயே பலரும் நடந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக உரையாற்றி சாச்சையை ஏற்படுத்திய நிலையில், வெளிநாட்டிற்கு சென்ற அவரை இங்கு வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் யோகா குறித்து இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக குரு என்பவர், தன்னை தேடுபவர்களை தானே தேடி வருவார் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

காய்ந்து போய் கிடக்கிறீர்களா என கேள்வி : மாறாக விளம்பரங்கள் மூலமாக சில விஷயங்களை பேசிவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களிடம் சென்று பெட்ஷீட் சகிதம் உட்கார்ந்து கொள்ளுமளவிற்கு மக்கள் காய்ந்துபோய் கிடக்கிறார்களா என்றும் செல்வராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். புத்தரின் வழிமுறைகளை பின்பற்றியே சுலபமாக யோகா, தியானம் போன்றவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கூறியபடி எளிமையாக நாசித் துவாரங்களின் வழியாகவே இவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் துவக்கத்தில் சுவாசம் குறித்த கவலைஇல்லாமல் இதை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

selvaraghavan raayan dhanush

தியானம் செய்யும் வழிமுறை: தியானத்தின்போது வேறு நினைப்புகள் வந்தாலும் அவற்றை நீக்க வேண்டாம் என்றும் அது தன்போக்கில் வந்து சென்று விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கூடியவிரைவில் தியானம் வசமாகிவிடும் என்றும் கூறியுள்ளார். நீச்சல் பயிற்சியை போன்றதே இதுவும் என்று கூறியுள்ள செல்வராகவன், இதை மறுக்கும் யாராவது உலகத்தில் உள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதை விட்டுவிட்டு தான் ஆன்மிக குரு என்று யாரோ சொல்வதை கேட்டு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் என்றும செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

தியானம் எளிமையானது: தியானம்தான் உலகத்திலேயே மிகவும எளிமையானது என்றும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன் தன்னுடைய சிறப்பான கருத்தை கூறியுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளனர். செல்வராகவனை ஜீனியஸ் என்றும் புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X