Selvaraghavan: ரெண்டு கை ரெண்டு கால்.. கெட்டப்பய சார்.. செல்வராகவன் வெளியிட்ட அதிரடி பதிவு!
சென்னை: நடிகர், இயக்குநர் என பன்முகம் காட்டினாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் செல்வராகவன். தனுஷின் அண்ணனான இவர் தனுஷின் ஆரம்பகால படங்களை சிறப்பான வகையில் கொடுத்திருந்தார். சிறப்பான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கட்டி போட்டவர்.
ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் புதுப்பேட்டை மயக்கம் என்ன போன்ற படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது நடிப்பு, இயக்கம் என அடுத்தடுத்து களமிறங்கி கலக்கல் பர்பார்மென்சை கொடுத்து வருகிறார் செல்வராகவன். தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ராயன் படத்திலும் இவர் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.

இயக்குநர் செல்வராகவன்: இயக்குநர் செல்வராகவன் அழுத்தமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்தவர். இவரது ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் இணைந்து நடித்து வருகிறார். இறுதியாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். தொடர்ந்து கடந்த ஆண்டில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் லீப் கேரக்டரில் நடித்திருந்தார்.
நடிப்பு + இயக்கம்: இந்நிலையில் தற்போது அடுத்ததாக இயக்கத்திலும் களமிறங்கியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் இயக்கத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் செல்வராகவன். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இவரது அடுத்தடுத்த போஸ்ட்கள் ரசிகர்களை அதிகமாக கவனம் ஈர்த்து வருகின்றன. வாழ்க்கைக்கான தத்துவங்களையும் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் இவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் ரஜினியின் முல்லும் மலரும் படத்தின் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் வெளியிட்ட பதிவு: அதில் ஒரு கையை இழந்த நிலையில் ரஜினி சரத்பாபுவிடம் பேசுவதாக அமைந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார். இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லை என்றாலும் பிழைத்துக் கொள்வான், கெட்ட பையன் சார் இந்த காளி என்று ரஜினி கூறுவதாக அமைந்த இந்த ஃபேமஸான டயலாக்கை பதிவிட்டுள்ள செல்வராகவன், அந்த கேரக்டர் தான்தான் என்று கேப்ஷனில் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் யாருக்கு மெசேஜ் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக பேட்டியொன்றில் தான் அதிகமான மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு பலமுறை முயன்றதாக செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

மனஉளைச்சல் குறித்து செல்வராகவன்: ஆனால் அவற்றிலிருந்து தான் தற்போது மீண்டு சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து மெசேஜ்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறார். தன்னுடைய படங்களில் நடித்த சோனியா அகர்வாலை கடந்த 2006ம் ஆண்டில் இவர் திருமணம் செய்துக் கொண்டார் செல்வராகவன். இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications