மிருகத்தனமான உழைப்பு.. அது இருந்தாதான் இது சாத்தியம்.. தனுஷை உச்சி முகர்ந்த செல்வராகவன்!

சென்னை: இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள செல்வராகவன் தற்போது நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் இவரை நடிகராக பார்த்து வரும் ரசிகர்கள், அவர் இயக்கத்தை கைவிடக்கூடாது என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி படத்தின் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 29ம் தேதி அவரது நடிப்பில் சொர்க்கவாசல் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இனறைய தினம் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தப் படத்தின் பிரமோஷன்களில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் ஈடுபட்டு வருகின்றனர்.

selvaraghavan dhanush rj balaji

இயக்குநர் செல்வராகவன்: நடிகர் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து சொர்க்கவாசல் படத்தில் நடித்து முடித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். படத்தில் மேலும் கருணாஸ், நட்டி நட்ராஜ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செல்வராகவன் கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. அவரது கெட்டப்பும் சிறப்பாக இந்த படத்தில் அமைந்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் பேசி வருகின்றனர்.

சொர்க்கவாசல் படம்: அந்த வகையில் செல்வராகவன் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். இவற்றில் அவரது அடுத்தடுத்த பிராஜெக்ட்கள் குறித்தும் அவர் இயக்கவிரும்பும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் செல்வராகவன் மனம் திறந்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை இயக்க தான் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படங்களை வெப் தொடர்களாக இயக்கவும் தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த படங்களை இன்னும் விளக்கமாகவும் விரும்பிய வகையிலும் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்பை தெரிவித்துள்ளார்.

தனுஷ் குறித்து பெருமிதம்: இந்நிலையில் செல்வராகவனின் வார்ப்பான நடிகர் தனுஷ் குறித்தும் அவர் தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார். 18 வயது சிறுவனாக இளைஞனாக தனுஷை அவர் துள்ளுவதோ இளமை படத்தில் பயன்படுத்திய நிலையில் அடுத்தடுத்த படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்தது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் செல்வராகவன் நடித்து கடந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராயன் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

மிருகத்தனமான உழைப்பு: அந்த வகையில் தனுஷின் மிருகத்தனமான உழைப்பை ராயன் படத்தின்போது தான் அருகில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய படங்களை சிறப்பாக்குவதற்காக தனுஷ் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார். இரவில் தனுஷ் தூங்குவதை இல்லை என்றும் மூன்று மணி நேரத்திலேயே திரும்பி வந்து தன்னுடைய அடுத்த கட்ட பணிகளில் ஈடுபடுவதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய வேலையை நேசிக்கும் ஒருவனால் தான் இத்தகைய மிருகத்தனமான, வெறித்தனமான செயல்பாட்டை கொடுக்க முடியும் என்றும் செல்வராகவன் கூறியுள்ளார். ஒரு தாய்மை உணர்வுடன் தனுஷை தான் அணுகும்போது மிகவும் பெருமிதமாக உணர்வதாகவும் செல்வராகவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X