Selvaraghavan: புதுப்பேட்டை 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. படத்தின் கதையை வெளிப்படுத்திய செல்வராகவன்!
சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் நடிகர் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் அனுபவம் குறித்தும் அடுத்தடுத்து தான் இயக்க திட்டமிட்டுள்ள படங்கள் குறித்தும் செல்வராகவன் தன்னுடைய பேட்டிகளில் பேசி வருகிறார்.

சொர்க்கவாசல் படம்: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆர்ஜே, விஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகம் காட்டி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அடுத்ததாக சூர்யாவின் சூர்யா 45 படத்தையும் இயக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே அவரது நடிப்பில் அடுத்ததாக சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள நிலையில் படத்தில் இயக்குநர் செல்வராகவன் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
ட்ரெயிலர் வெளியீடு: இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை சில தினங்களுக்கு முன்னதாகவே நடிகர் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் துவங்கி விட்டனர். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் அதிகமான காட்சிகள் சிறையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இயக்குநர் செல்வராகவன்: இந்நிலையில் இந்தப்படத்தின் பிரமோஷனுக்காக பேசிய நடிகரும் முன்னணி இயக்குநருமான செல்வராகவன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் வேலைகள் நடந்துவரும் நிலையில், அடுத்தடுத்து புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை இயக்க தான் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க தான் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் ஆனால் நடிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் ஒரு வருடம் அவர்களை ஒரே படத்தில் வைத்திருப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுப்பேட்டை 2 படத்தின் கதை: தற்போது அடுத்தடுத்த படங்களுக்காக நடிகர்கள் ஓடுவதாகவும் அதற்கேற்ப ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களத்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கேற்ப தயார் படுத்திக் கொள்வதன் தேவையையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, புதுப்பேட்டை 2 படத்தை திரையில் பார்க்க வேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் தனுஷ் கேரக்டரின் மகன் குறித்த கதையாக உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் 70 -80 சதவிகித ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











