Selvaraghavan: தனுஷ் தூங்காம ஓடுறான்.. தனுஷ் குறித்து செல்வராகவன் ஓபன்.. ரசிகர்கள் கவலை!

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜானரில் படம் எடுத்தாலும், அதனுள் மனத மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவர் அண்மையில் அளித்துள்ள் பேட்டியில் தனது தம்பியும் நடிகரும் இயக்குநருமான தனுஷ் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து காணலாம்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன், இளைய மகன் தனுஷ். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் இன்றைக்கு மிகவும் முக்கியமான இடத்தில் இன்னும் சொல்லப்போனால் உயரத்தில் உள்ளனர். செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இப்போதுவரை இவரது இயக்கத்தில் வெளியான படங்களான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தினை ரசிகர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

selvaraghavan dhanush

இதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. செல்வராகவன் சில படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் தனுஷ். இவரது இயக்கத்தில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. அதேபோல் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ராயன்: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்தார். இதில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராயன் படம் வசூல் ரீதியாக ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் அண்மையில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்த கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

selvaraghavan dhanush

தனுஷ்: அதாவது இயக்குநர் தனுஷ் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, "தனுஷ்ஷின் கடின உழைப்பைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. ராட்சசத்தனமாக உழைக்கின்றார். இரவு பகல் என தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றான். எனக்கு பொறாமையாக உள்ளது. நாமும் இப்படி இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகின்றது. தனுஷ் இயக்கத்தில் நடிக்கும்போது, அவர் கூறுவதை நாம் அப்படியே செய்யவேண்டும் என இல்லை. ஆனால் அதைக் கெடுக்காமல் செய்தால் போதுமானது. அவருக்கு என்ன வேண்டும் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்" என பதில் அளித்தார்.

selvaraghavan dhanush

கவலை: இவரது இந்த பதிலில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றார் என்ற சொற்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் ஓய்வு இல்லாமல் ரசிகர்களை மகிழ்விக்க தனுஷ் கஷ்டப்படுகின்றார் எனவும் கவலை அடைந்தும் வருகின்றனர். தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தினை இயக்கி நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படம் டிசம்பர் கடைசியில் வெளியாகும் என கூறப்படுகின்றது. செல்வராகவன் நடிப்பில் வரும் 29ஆம் தேதி சொர்க்கவாசல் படம் வெளியாகவுள்ளது.

selvaraghavan dhanush

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X