இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பு.. விவாகரத்திற்கு பிறகு செல்வராகவனுக்கு தனுஷ் சொன்ன விஷயம்!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இருவரும் சகோதரர்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.

செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் தனுஷ் நடித்துள்ளார். சமீபத்தில் நானே வருவேன் படத்தில் இருவரும் இணைந்திருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை என்றும் அதனால் தனுஷின் புதிய வீட்டு கிரஹபிரவேசத்திற்கு செல்வராகவன் செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் டோலிவுட்டிலும் சார் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

முன்னதாக தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய சகோதரனிடம் இருந்து காக்கும் அவரது பிரயத்தனங்கள் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டணி

நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டணி

படத்தில் கெட்டவனாக தனுஷை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். படத்தின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் வெளியான இந்தப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

வெற்றியை கொடுத்த படங்கள்

வெற்றியை கொடுத்த படங்கள்

ஆனால் ரசிகர்களை இந்தப் படம் கவரத் தவறியது. இதையடுத்து சொதப்பலான ரிசல்ட்டையே படம் கொடுத்தது. ஆனால் இந்தப் படத்திற்கு முன்னதாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் அடுத்ததாக வெளியான வாத்தி படங்கள் தனுஷிற்கு மிகுந்த வரவேற்பை கொடுத்தது.

தம்பி குறித்து பேசிய செல்வராகவன்

தம்பி குறித்து பேசிய செல்வராகவன்

இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக் கொண்டுள்ளார் செல்வராகவன். இந்நிலையில் அவர் தனது சமீபத்திய பேட்டியில், தன்னுடைய தம்பி தனுஷ் குறித்து மனம் திறந்துள்ளார்.

சிங்கிளாக இருக்க அறிவுரை

சிங்கிளாக இருக்க அறிவுரை

தான் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபோது, தன்னிடம் வந்த தனுஷ், இறைவன் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். சிங்கிளாகவே இருக்க தனக்கு தனுஷ் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மனைவி மீது நம்பிக்கை

இரண்டாவது மனைவி மீது நம்பிக்கை

ஆனால் தன்னுடைய இரண்டாவது மனைவி கீதாஞ்சலி மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தான் அவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X