செல்வராகவனை செருப்பால் அடித்த அவரது அப்பா.. அவரே சொன்ன காரணம்!
சென்னை : சிறப்பான பல படங்களை தன்னுடைய கேரியரில் இயக்கியுள்ளார் டைரக்டர் செல்வராகவன்.
தற்போது நடிகராகவும் மாறியுள்ள செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் நானே வருவேன் படம் வெளியானது.
இதனிடையே தற்போது பகாசுரன் என்ற படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை என்ற படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவரது புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என பல படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக அமைந்தன.

நானே வருவேன் படம்
சமீபத்தில் தன்னுடைய தம்பி தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் தானே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார் தனுஷ். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தனுஷிற்கு சிறப்பாக அமைந்தது.

நடிகராக கலக்கும் செல்வராகவன்
இயக்குநராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்திவந்த செல்வராகவன், நடிகராகவும் சமீப காலங்களில் நடித்து வருகிறார். சாணிக் காயிதம், பீஸ்ட் மற்றும் நேற்றைய தினம் வெளியாகியுள்ள பகாசுரன் என அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன் 2 படம்
அடுத்ததாக இவரது இயக்கத்தில் என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பகாசுரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய செல்வராகவன், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

செருப்படி பட்ட செல்வராகவன்
இதனிடையே தான் தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் செருப்படி பட்டது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். தன்னுடைய தந்தையிடம் சென்று தான் படித்தது போதும் என்றும் சினிமாவிற்கு செல்கிறேன் என்று தான் கூறியதாகவும் அதற்கு அவர் தன்னை செருப்பால் அடித்ததாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

சினிமாவிற்கு செல்ல விருப்பம்
சினிமாவிற்கு செல்ல விரும்பிய செல்வராகவனை கஸ்தூரி ராஜா செருப்பால் அடித்துள்ளார். ஆனால், அந்த சினிமாதான் தற்போது செல்வராகவனை சர்வதேச அளவில் அனைவரும் அறியும் வண்ணம் செய்துள்ளது. சினிமாவில் இயக்குநராக இருந்த கஸ்தூரி ராஜா தன்னுடைய மகன் சினிமாவிற்கு செல்வதை விரும்பாத நிலை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











