Lover: படம் பார்த்து மெய்மறந்துவிட்டேன்.. லவ்வர் படத்தை பாராட்டிய செல்வராகவன்!
சென்னை: மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் லவ்வர். காதலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இத்திரைப்படம் அவர்களிடம் கவனத்தை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
சில்லு கருப்பட்டி, ஜெய் பீம், குட் நைட் என தரமான படங்களை தேர்வு செய்து நடித்து, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் வெளியானது.

எத்தனை ஆண்டுகள் உருகி உருகி காதலித்தாலும், அந்த காதல் ஒரு கட்டத்திற்கு மேல், ஏன் வெறுப்பாக மாறுகிறது. காதலின் அதீத அன்பே, காதலர்களின் பிரிவுக்கான காரணமாக மாறுகிறது என்பதை, அழகான காதலோடு லவ்வர் படத்தில் கூறி இருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
மணிகண்டனின் லவ்வர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் அதே தேதியில் வெளியானதால், லவ்வர் படம் வெளியான போது குறைந்த அளவிலான திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு. ஆனால், லவ்வர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்தால், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் இப்படம் நாளடைவில் பிக் அப் ஆகி, முதல் மூன்று நாட்களிலேயே ரூ.3 கோடி அளவு வசூலை அள்ளியது.
காதலர்களிடம் வரவேற்பு: ரஜினி நடித்த படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் அதற்கு போட்டியாக லவ்வர் படம் வசூலித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி லவ்வர் படம் காதலர் தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆனதால், இதற்கு காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
செல்வராகவன் பாராட்டு: இந்நிலையில், லவ்வர் படம் பார்த்த இயக்குநர் செல்வராகவன், தனது ட்விட்டர் பக்கத்தில், 'லவ்வர் பார்த்தேன். Loved it. இந்த தலைமுறையின் காதலை பற்றி காட்டி இருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நான் படம் பாரிக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு ரியலிட்டிக்காக இருந்த்து. நடிகர் மணிகண்டன் மற்றும் கதாநாயகி ஸ்ரீகௌரி பிரியா, இயக்குனர் பிரபுராம் வியாஸ் ஆகியோரையும் பாராட்டி இருக்கிறார் என பதிவிட்டுள்ளார். தரமான வித்தியாசமான படங்களை கொடுத்து சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்த செல்வராகவனே லவ்வர் படத்தை பாராட்டி உள்ளதை மகிழ்ச்சியோடு மணிகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











