புது கதையை எழுதி முடித்துள்ள செல்வராகவன்… ஆர்வம் காட்டும் ரசிகர்கள் !

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன்.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்கள் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் அதனை எண்ணி காத்துள்ளனர்.

புதுவித முயற்சி

புதுவித முயற்சி

செல்வராகவன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. நாம் அறிந்த கதையாக இருந்தாலும் அதனை புது விதமாக எடுத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கொடுத்தார். SJ சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை அள்ளியது.

மிரட்டும் லுக்

மிரட்டும் லுக்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் நாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார். செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. செல்வராகவனின் லுக் இந்த படத்தில் மிரட்டலாக உள்ளது.

மீண்டும் தனுஷுடன்

மீண்டும் தனுஷுடன்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். நானே வருவேன் என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இந்நிலையில் செல்வராகவன் புதிதாக கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X