அடுத்த ப்ராஜெக்ட் ரெடி... சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்

சென்னை : டைரக்டர் செல்வராகவன் தன்னுடைய சிறப்பான இயக்கத்திற்காக நாடு முழுவதும் அறியப்படும் இயக்குநராக உள்ளார்.

இவரது ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களங்களால் போற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வித்தியாச கதைக்களங்கள்

வித்தியாச கதைக்களங்கள்

டைரக்டர் செல்வராகவன் நடிகர் தனுஷின் சகோதரர். ஆரம்ப காலகட்டங்களில் தனுஷை வைத்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை இயக்கி தானும் பெயர் பெற்று தனுஷிற்கும் பெயரை பெற்றுத் தந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது.

சாணிக் காயிதம் படத்தில் நடிப்பு

சாணிக் காயிதம் படத்தில் நடிப்பு

எஸ்ஜே சூர்யா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. எஸ்ஜே சூர்யாவிற்கும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அருண் மாதேஸ்வரன் பாராட்டு

அருண் மாதேஸ்வரன் பாராட்டு

சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், செல்வராகவன் ஆகச்சிறந்த நடிகர் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தானத்தின் மன்னவன் வந்தானடி, தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளன.

செல்வராகவன் அப்டேட்

செல்வராகவன் அப்டேட்

ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் செல்வராகவன், தன்னுடைய ட்விட்டரில் க்ளோஸ்-அப் செல்பி ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் ஸ்கிரிப்டை முடித்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த ட்வீட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எந்த படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து பேசியுள்ளார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். விரைவில் அதையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X