Raayan: ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் ஜொலிக்கிறாரு! ராயன் படம் குறித்து ஜீனியஸ் செல்வராகவன் போஸ்ட்!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ளா ராயன் படத்திற்காக தனுஷ்க்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கின்றது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக இந்த படத்தினை வரவேற்றுள்ளனர்.

Raayan Dhanush Selvaraghavan

ஹைதராபாத்தில் இந்த படத்தினைப் பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி தியேட்டருக்குள் சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றது. படத்தில் நடித்துள்ள இயக்குநர் செல்வராகவன், தனுஷின் உடன் பிறந்த அண்ணன். தனுஷை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.

வெற்றி மாறன்: இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய செல்வராகவன், சிறுவயதில் உங்களது தம்பிகளைத் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். அவர்கள் ஒருநாள் வளர்ந்து வந்து உங்களை வதைத்து எடுப்பார்கள் எனக் கூறினார். இதற்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சிரித்தனர். மேலும் படம் குறித்து பேசுகையில், தனுஷ் மிகவும் சிறப்பாக இந்த படத்தினை இயக்கியுள்ளார். எங்கிருந்து இதுபோல இயக்கம் செய்ய கற்றுக்கொண்டார் என ஆச்சரியப்படவைத்தார். என்னை விடவும் தனுஷை மிகச் சிறப்பாக இயக்கியது இயக்குநர் வெற்றி மாறன்தான்” எனக் கூறினார்.

செல்வராகவன்: இப்படியான நிலையில், இன்று ராயன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தினைப் பார்த்த இயக்குநர் செல்வராகவன், தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ராயன் படம் பார்த்தேன். படம் குறித்து விளக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது.

ஜொலிக்கும் தனுஷ்: நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷ் ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கின்றார். ஒரு அண்ணனாக உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன் தனுஷ். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சார், நீங்கள் எங்களை உங்களது இசையால் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X