''பகாசூரன்'' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதிரடியாக திரையில் மிரட்ட வருகிறார் செல்வராகவன்!

சென்னை : மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பகாசூரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

செல்வராகவன் நடிகரானார்

செல்வராகவன் நடிகரானார்

காதல்கோட்டை,7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொலை, ரத்தக்களறி, பகை, பழிவாங்குதல் என வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன்

மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன்

சாணிக்காயிதம் திரைப்படத்தை அடுத்து செல்வராகவன் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இவர் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களை இயக்கி உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வியாபார ரீதியாக இத்திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் இந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன.

ஆவளைத்தூண்டிய டிரைலர்

ஆவளைத்தூண்டிய டிரைலர்

பகாசூரன் என வித்தியான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், பெண்களுக்கு எதிராக சமூதாயத்தில் நடக்கும் கொடுமைகுறித்தும், பெண்கள் ஒரு போகப்பொருளாக பார்க்கும் இந்த சமூதாயத்தின் அழுக்கை அகற்ற பகாசூரனாக கத்தியோடு களமிறங்கி உள்ளார் செல்வராகன். நெற்றியில் பட்டை, குங்குமம், கழுத்தில் ருத்ராட்சை மாலை என கோவில் பூசாமி போல மிரட்டலாக இருக்கிறார் செல்வராகவன்.

ரிலீஸ் தெரியுமா?

ரிலீஸ் தெரியுமா?

இந்நிலையில் ,பகாசூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X