“வெகு விரைவில் நமக்கான கதவும் திறக்கும்“..செல்வராகவன் ட்வீட்.. எதற்கு இந்த பதிவு !

சென்னை : இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கையூட்டும் கருத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகள் பல குவித்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தள பக்கங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

திரைப்பட அப்டேட்டுகள், ரசிகர்களுடனான உரையாடல் என அவ்வவ்போது இவர் பதிவிடும் பதிவை பார்க்க ட்விட்டரில் மட்டும் இவரை 2.6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் ஒரு வித்தியாக விரும்பி என்று சொல்லலாம் அவரின் ஒவ்வொரு படைப்பும் பல கதைகளை சொல்லும். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. துள்ளுவதோ இளமை , காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

7ஜி ரெயின்போ காலனியில் நடித்த சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டுப்பிரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

சாணிக் காயிதம்

சாணிக் காயிதம்

திரைக்குப்பின்னால் மட்டுமே இருந்து வந்த செல்வராகன் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு அரசு அதிகாரியாக தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து, ராக்கி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக் காயிதம் படத்தில் நடித்திருந்தார். 80களில் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் கேஸ் சிலிண்டரை தூக்கிக்கொண்டு, கையில் பீடியுடன் படம் முழுக்க நடித்திருந்தார். இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நானே வருவேன்

நானே வருவேன்

செல்வராகவன் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர். சினிமாவில் தனுஷை சிறந்த நடிகராக மெருகேற்றியதும் செல்வராகவன் தான். இதனால் செல்வராகவனை தனது குருவாகவும் போற்றி வருகிறார் தனுஷ்.

நம்பிக்கையூட்டும் பதிவு

நம்பிக்கையூட்டும் பதிவு

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கையூட்டும் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம். நம் கனவை இன்னொருவர் வாழலாம். அதைப் பார்த்து பொறாமைப்பட்டு ஏக்கத்திலேயே காலம் தள்ளக்கூடாது. நம் கையில் இருப்பது ஊசியில் நூல் கோர்க்கும் வேலை என்றாலும் மனம் ஒன்றி திறம்பட செய்வோம். வெகு விரைவில் நம் கதவும் திறக்கும். என குறிப்பிட்டுள்ளார்.செல்வராகவின் இந்த பதிவுக்கு லைக்குகள் பல குவித்து வருகின்றன.

Recommended Video

Beast Movie Team Interview | Nelson | Selvaraghavan |Pooja Hegde
வில்லனாக

வில்லனாக

செல்வராகவன் அடுத்ததாக ஒருநாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X