'பேபி நம்பர் 3 ஆன் தி வே' ஜனவரியில் ரிலீஸ்.. பேபி பம்ப்புடன் அறிவித்த இயக்குநர் செல்வராகவனின் மனைவி!
சென்னை: பிரபல இயக்குநரான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தனது பேபி பம்ப் செல்பியுடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான இவர், இரண்டாவதாக காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வாலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

திருமணம்
தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை ஆகிய படங்களையும் சோனியா அகர்வாலை வைத்து இயக்கினார். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர, 2006ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்
ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் 2011ஆம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். கீதாஞ்சலி செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

மூன்றாவதாக கர்ப்பம்
செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 2012ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தைகளுக்கு லீலாவதி, ஓம்கார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

ஜனவரியில் ரிலீஸ்
இதனை டிவிட்டர் பக்கத்தில் தனது பேபி பம்ப் செல்பியை ஷேர் அறிவித்துள்ளார். அந்த போட்டோவுக்கு பேபி நம்பர் 3 ஆன் தி வே.. ஜனவரியில் ரிலீஸ்.. லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் ஆர்வமுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கிண்டல்
கீதாஞ்சலியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கீதாஞ்சலிக்கும் செல்வராகவனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் மூன்றாவது முறையாக அப்பாவாகவுள்ள செல்வராகனை கிண்டடிலடித்தும் டிவிட்டியுள்ளனர்.

விரைவில் ரிலீஸ்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றன. லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











